வசமாக சிக்கிய சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன்.. கைதுக்கு காரணமான பூட்டர் பவுண்டேஷன்!
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே இருந்த நிலையில்தான் ஜெகநாதன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகம்.. ஆனால் தந்தை பெரியாரை புறக்கணிப்பது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை மறுப்பது, பெரியார் பல்கலைக் கழகத்தில் பெரியார் குறித்த நூல்களை எழுதிய பேராசிரியருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்புவது என ஏகத்துக்குமான சர்ச்சைகளில் சிக்கியவர்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜெகநாதன்.

ஜெகநாதன் விவகாரம் குறித்து கடந்த மாதம் 23-ந் தேதி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த பூட்டர் பவுண்டேஷன் விவகாரமும் தற்போது துணை வேந்தர் ஜெகநாதன் கைதாகக் காரணம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
பூட்டர் பவுண்டேஷன்: கொளத்தூர் மணி தமது அறிக்கையில், சேலத்தில் பெரியார் பல்கலைத் தொடங்கிய நோக்கமே சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பட்டியலின, பழங்குடி ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை வளர்க்கவே ஆகும். அதைச் சிதைக்கும் வகையில் அண்மையில் பூட்டர் பவுண்டேஷன் என்ற தனியார் கம்பெனி கல்வி நிறுவனத்தை பெரியார் பல்கலையில் துவக்க கடந்த 6ம் தேதி நடைபெற்ற ஆட்சிக்குழுவில் டேபிள் அஜெண்டா வைத்து உள்ள தாக தெரிய வருகிறது . இதன் இயக்குநர்கள் யார் எனில் துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் பொறுப்பு தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், இவர்களோடு திருச்சி பாரதிதாசன் பல்கலைப் பேராசிரியர் ஒருவர்.
தன்னிச்சையான போக்கு: பொதுவாக அரசு ஊழியர் ஒருவர் தனியார் நிறுவனமோ வணிகமோ துவங்க வேண்டுமானால் அரசின் முன் அனுமதி பெற வேண்டும். அரசுப் பணியினில் இருந்து பணித்துறப்பு செய்த பிறகு தான் தனியார் கம்பெனியினைத் தொடங்க முடியும். மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் பங்குகளை வாங்கவோ முதலீடு செய்யவோ வேண்டும் என்றால் பல நடைமுறைகளைப் பின்பற்றியும் ஆட்சிக்குழுவில் ஒப்புதல் பெறவும் வேண்டும். ஆட்சிக் குழுவின் ஒப்புதலை அரசுக்கு அனுப்பி அரசின் அனுமதி பெற வேண்டும். அப்படி பெற்றால் தான் அரசு ஊழியரின் பணிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆனால் இந்த நடைமுறை எதையும் கடை பிடிக்காமல் தன்னிச்சையாக அரசுக்கு தெரிவிக்காமலேயே துணை வேந்தர் தன்னையும் ஒரு இயக்குநராக வைத்து பெரியார் பல்கலையில் தனியார் கம்பெனியை சட்டத்திற்கு விரோதமாக பூட்டர் என்ற தனியார் கம்பெனியை கம்பெனி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார். இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு விரோதமானது; அரசுக்கும் எதிரானது; மேலும் பெரியார் பல்கலையை தனியார் வியாபார நிறுவனம் ஆக்கும் செயலுமாகும்.
வாடகைக்கு விட்ட துணை வேந்தர்: இது நடைமுறைக்கு வந்தால் புதிய பாடங்களை அவர்களே துவங்கலாம். அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் பாடங்களை நடத்த அனுமதி கொடுக்கலாம் பாடங்களை விற்கலாம்.பாட கட்டணம் தேர்வுக் கட்டணம் எல்லாம் அவர்களே நிர்ணயம் செய்யலாம். பல்கலை உபகரணங்கள், பல்கலையின் இடம், ஆய்வகம் ஆகியவற்றைத் தனியார்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.அதற்கு பல்கலைக்கு எதுவும் தர வேண்டாம். இவர்களிடம் பல கம்பெனிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் கல்வி நிறுவனம் துவங்கலாம். அரசுக்கோ பல்கலைக்கோ இவர்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்க வேண்டியது இல்லை. தனியார் கம்பெனியினை பல்கலையில், அதுவும் பல்கலை அதிகாரிகளே துவங்குவதை அரசு அனுமதிக்கக் கூடாது. இனியும் அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க கூடாது. தனியார் கல்வி துவங்கினால் மாணவர்களிடம் இருந்து கொள்ளை கட்டணம் வசூல் செய்வார்கள். சமூக நீதி, இட ஒதுக்கீடு காற்றில் பறக்கும் நிலைக்கு தள்ளப்படும் என குரல் எழுப்பி இருந்தார்.
பேராசிரியர் இரா. சுப்பிரமணி விவகாரம்: இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ’பெரியாரின் போர்க்களங்கள்” என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அவர் பணியாற்றி வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இரா.சுப்பிரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பாணை அனுப்பியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.
பெரியார் இருக்கை பொறுப்பு இயக்குநர்: பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ள இரா.சுப்பிரமணி, அப்பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அத்துடன் பெரியார் பல்கலைக்கழக பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குனராகவும் அவர் உள்ளார். பெரியார் இருக்கையின் நோக்கமே தந்தைப் பெரியாரின் சாதனைகளை பரப்புவது தான். அந்த வகையில் தான் மக்கள் நலனுக்காகவும், சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவும் பெரியாரின் போராட்ட வரலாறுகளை அவர் தொகுதித்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு எனவும் கண்டித்திருந்தார். இத்தகைய அடுத்தடுத்த புகார்கள், சர்ச்சைகளில் சிக்கிய நிலையில்தான் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications