என் குடும்பத்தை பற்றி பேச நீ யாருடா? கள்ளக்குறிச்சியில் 'சாட்டை' துரைமுருகன் விட்ட பளார்- புது தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தமது குடும்பத்தை பற்றி இழிவாக பேசியதாக முகில் வீரப்பன் என்பவரை பளார் என அறையும் புதிய வீடியோக்கள் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழ்நாடு அரசு ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது.

தமிழ்நாடு சட்டசபையிலும் அதிமுக இந்த பிரச்சனையை தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதற்கு தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமும் அளித்திருக்கிறார்.
இதனிடையே கள்ளக்குறிச்சிக்கு சென்ற நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த சாட்டை துரைமுருகன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து உண்மை கள நிலவரத்தை அறிந்து திரும்பும் போது முகில் வீரப்பன் என்கிற நபர் குடிபோதையில் அங்கிருந்த பெண்களிடம் தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தார் அதைக் நாம்தமிழர் கட்சியினர் தட்டிக் கேட்ட போது ஒருமையில் பேசி கற்களை கொண்டு வாகனத்தில் வீசி தாக்க முற்பட்டார், அப்போது பொது மக்கள் அவரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர் என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் புதிய வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகன் காரில் இருந்து இறங்குகிறார். அப்போது முகில் வீரப்பனுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில், என் குடும்பத்தைப் பற்றி பேச நீ யாருடா? என கேட்டபடியே முகில் வீரப்பன் கன்னத்தில் பளார் என சாட்டை துரைமுருகன் அறைகிறார். இதனையடுத்து அங்கு லேசான கைகலப்பு ஏற்படுகிறது. இதன் பின்னரே மீண்டும் முகில் வீரப்பன் சாட்டை துரைமுருகனை நோக்கி அடிக்கப் பாய்கிறார் என காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications