ஆளுநரின் அசால்ட் பதிலால் அப்செட்... ஸ்டாலின் நடத்திய மெரினா போராட்டத்தின் பின்னணி இதுதான்!
சட்டசபையில் தாம் தாக்கப்பட்டது தொடர்பாக முறையிட்டபோது ஆளுநர் அளித்த பதில் திருப்தி தராததால் ஸ்டாலின் போராட்டத்தில் குதித்ததாக கூறப்படுகிறது.
சென்னை: சட்டசபையில் தாம் தாக்கப்பட்டது குறித்து முறையிட்டபோது ஆளுநர் வித்யாசாகர் அளித்த பதில் திருப்தி தராததாலேயே சென்னை மெரினாவில் ஸ்டாலின் போராட்டம் நடத்தியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.

ஸ்டாலின் சட்டை கிழிப்பு
இதனால் சட்டசபையில் பெரும் களேபரம் வெடித்தது. தம்முடைய கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலினை சபை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது தாம் தாக்கப்பட்டதாகவும் தம்முடைய சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

பேட்டி
கிழிந்த சட்டையுடனேயே சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதே சட்டையுடன் தலைமைச் செயலகம் அருகே குவிந்த இளைஞர்களையும் சந்தித்தார் ஸ்டாலின்.

ஆளுநருடன் சந்திப்பு
அத்துடன் கிழிக்கப்பட்ட சட்டையுடனேயே பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார். ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவோ, ஆகட்டும் பார்க்கலாம் என்ற ரீதியில் பட்டும் படாமலும் பதில் சொல்லியிருக்கிறார்.

அதிருப்தியால் போராட்டம்
ஆளுநரிடம் இருந்து தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்த்த ஸ்டாலினுக்கு இப்படியான பதில் அதிருப்தி தந்ததாம். இதையடுத்தே ஸ்டாலின் திடீரென மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருந்ததார் என்கின்றன திமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications