சமூக நீதிதான் முக்கியம்! அடித்து தூக்கிய ஸ்டாலின்.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. ரொம்ப பெரிய ரிஸ்க்
விழுப்புரம்: வாக்கு அரசியல் ரீதியாக கட்சிகள், தலைவர்கள் செய்ய தயங்கும் முக்கியமான விஷயம் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு உள்ளார். தமிழ்நாடு அரசியலில் இந்த மூவ் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமம் தமிழ்நாட்டில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள கிராமங்களில் ஒன்றாகும். முக்கியமாக இங்கே உள்ள குறிப்பிட்ட ஆதிக்க - இடைநிலை சாதிக்கும், ஆதி திராவிட மக்களுக்கும் இடையில் அடிக்கடி சாதி பிரிவினை மோதல்கள் வருவது வழக்கம்.

அங்கு உள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் கோயிலில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தமிழ்நாட்டையே உலுக்கியது. திரவுபதி அம்மன் கோயிலில் ஆதிதிராவிட மக்கள் வழிபடுவதற்கு அங்குள்ள ஒரு சமூகப் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவிலில் வழிபாடு நடத்த சென்றவர்களை தடுத்து இடைநிலை சாதி இந்துக்கள் வெளியே அனுப்பி உள்ளனர். அதோடு இல்லாமல் கடந்த ஏப்ரல் 8-ந் தேதி திரவுபதி அம்மன் கோயிலில் வழிபட வந்ததாக ஒரு நபர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் மீது குறிப்பிட்ட இடைநிலை சாதியினர் சரமாரி தாக்குதலை நடத்தினர். அதோடு அதை தடுக்க வந்த சில ஆதி திராவிட சமூக மக்களையும் மோசமாக தாக்கி உள்ளனர். அந்த இடைநிலை சாதியினர் சொல்லும் கருத்துப்படி.. இது பொது கோவில் இல்லை. எங்கள் ஜாதி கோவில்.

எங்களுக்கான தனிப்பட்ட கோவில் என்று குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் சட்டப்படி தனி ஜாதி கோவில்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினரை தடுப்பது என்பது தீண்டாமை, வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிரானது. விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டது.
பேச்சுவார்த்தை: பொதுவாக இது போன்ற விவகாரங்களில் ஜாதி மோதல்களை, கலவரங்களை தடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி செய்யப்படும். அதன்படியே விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் 2 மாதங்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் பயன் அளிக்கவில்லை.
விழுப்புரம் எஸ்பி, மயிலம்,விக்கிரவாண்டி, விழுப்புரம எம்.எல்.ஏக்கள், விழுப்புரம் எம்பி ஆகியோர் இந்த விவகாரத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் காணப்பட முடியவில்லை. ஆதி திராவிட மக்களை கோவிலுக்குள் நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம். அதற்கு வழியே இல்லை என்று அப்பகுதி இடைநிலை சாதியினர் மறுத்துவிட்டனர்.

இது எங்கள் ஜாதி கோவில் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில் கோவிலிலோ அனைத்து ஜாதியினரும் அனுமதிக்கப்பட வேண்டும். இங்கே சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
இல்லையென்றால் ஆர்ப்பாட்ட போராட்டங்களில் நாங்கள் ஈடுபட வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதில் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனை சரியாகவில்லை. அதோடு இடைநிலை சாதியினர் அங்கே தீ குளிக்க முயன்று தலித் ஆலய நுழைவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்துதான் தற்போது ஆளும் தரப்பு துணிச்சலாக செயல்பட்டு அருள்மிகு திரவுபதி அம்மன் கோயிலை இன்று காலை பூட்டி சீல் வைத்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று சீல் வைத்துள்ளனர்.

துணிச்சலான ரிஸ்க்: 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஸ்டாலின் அரசு கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பொதுவாக சாதி வாக்குகள் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் வட மாவட்டங்களில் இது போன்ற ஒரு ஜாதியை பகைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அரசு செய்யாது.
இரண்டு தரப்பிற்கும் ஏற்ற முடிவுகளை எடுப்பதையே இதுவரை கட்சிகள் மேற்கொண்டு வந்துள்ளன. ஆனால் முதல்முறையாக தற்போது சமூக நீதியை நிலைநாட்டும் வகையில்.. ஜாதியை விட சமத்துவம்தான் முக்கியம் என்று துணிச்சலாக கோவிலுக்கு சீல் வைத்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications