மதுரை முக்கிய பிரமுகருக்கு 'குறி' வைத்ததால் போலீஸ் என்கவுண்ட்டர்?
மதுரையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளும் முக்கிய நபரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
Recommended Video

மதுரை: மதுரையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளும் முக்கிய நபரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர்.
மதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே பொட்டப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருளாண்டி (29). இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் இவர் மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான சகுனி கார்த்தி (30) என்பவருடன் மதுரையில் ஒரு வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்பட்டது.

சதி திட்டம்
இருவரும் மதுரை - திண்டுக்கல் சாலையில் உள்ள சிக்கந்தர் சாவடியில் ஒரு வீட்டில் இருப்பதாகவும் இருவரும் சேர்ந்து முக்கிய பிரமுகரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தற்காப்புக்காக...
இதையடுத்து அந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது இருவரும் சேர்ந்து தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தற்காப்புக்காக போலீஸாரும் திருப்பி சுட்டனர்.

ரவுடிகள் பிடிப்பட்டால்
இதில் இரு ரவுடிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் அவர்கள் யாரை கொல்ல சதி திட்டம் தீட்டினர் என்பது குறித்து தெரியவில்லை. அவர்களுடன் தொடர்புடைய மற்ற ரவுடிகள் பிடிபட்டால் மட்டுமே இது தெரியும்.

பொதுமக்கள் கோரிக்கை
இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தால் ரவுடிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சதியை செயல்படுத்த மற்ற ரவுடிகளிடம் இவர்கள் ஏதேனும் கூறியிருக்கலாம் என்றும் அவர்கள் அதை எக்ஸிகூட் செய்வதற்குள் அவர்களை பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications