ஆஹா.. விஜயகாந்த் பளார் பளார் என அடிப்பதற்குக் காரணம் இதுதானா?.. அம்பலப்படுத்திய ராதிகா!
சென்னை: விஜயகாந்த் எல்லோரையும் போட்டு அடிக்கிறார் என்றால் அதற்கு முக்கியக் காரணமே இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்தான் என்று சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா.
விஜயகாந்த்தின் கோபம், கொந்தளிப்பு ஊர் அறிந்தது, நாடு அறிந்தது, உலகம் அறிந்தது. ஆனால் ஏன் இப்படிக் கோபப்படுகிறார் என்றுதான் யாருக்குமே தெரியவில்லை. அவர் எதார்த்தமானவர், கோபம் வந்தால் பட்டென பேசி விடுகிறார், அடித்து விடுகிறார் என்பது பொதுவாக சொல்லப்படும் காரணங்கள்.
அவரது கோபத்தைக் குறைக்க யோகாவெல்லாம் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனாலும் கோபம் குறைந்ததாகவே தெரியவில்லை.

தேர்தல் பிரசாரத்தில் கோபம்
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது பிரசாரத்தின்போது விஜயகாந்த் கோபப்பட்டதை உலகமே பார்த்தது. தனது கட்சி வேட்பாளரையே போட்டு சரமாரியாக தாக்கினார் விஜயகாந்த்.

சட்டசபையில் கோபம்
அதேபோல சட்டசபையிலும் அவர் "மதுரை வீரனாக" மாறி கையை நீட்டி, நாக்கைக் கடித்து கோபத்தைக் காட்டி அனைவரையும் அலர வைத்தார்.

செய்தியாளர்களிடம் கோபம்
இதேபோல செய்தியாளர்கள் கூட்டத்தில் எல்லாம் யாராவது ஏதாவது கேள்வியைக் கேட்க அதற்குப் பதிலளிக்காமல் கோபப்படுவது, அடிக்கப் பாய்வது, காரித் துப்புவது தொடர் கதையாகி விட்டது.

காரணத்தைச் சொன்ன ராதிகா
இப்படி தொடர் கோப நாயகனாக விஜயகாந்த் திகழ்ந்து வருவதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் அதற்கான காரணத்தை ராதிகா புட்டு வைத்துள்ளார்.

ராசியான ஜோடி
ஒரு காலத்தில் விஜயகாந்த் - ராதிகா ஜோடி செம ஹிட்டான ஜோடியாக வலம் வந்தது. பல படங்கள் இருவரும் இணைந்து கலக்கியிருப்பார்கள். தெற்கத்திக் கள்ளன், நானே ராஜா நானே மந்திரி என இவர்கள் ஜோடி போட்ட படங்கள் நிறைய.

நையப்புடை டிரெய்லர் வெளியீடு
இந்த நிலையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து உருவாகியுள்ள நையப்புடை என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது ராதிகா பேசுகையில், விஜயகாந்த் குறித்த ரகசியத்தையும் வெளியிட்டுப் பேசினார்.

கோபமான சார்
ராதிகா பேசுகையில், நான் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை சார் என்று தான் கூப்பிடுவேன். இவருடைய நிறைய படத்தில் நான் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பில் சார் ரொம்ப கோபப்படுவார். அவர்கள் மேல் உள்ள உரிமையால் உதவியாளர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரை அவர் அடித்திருக்கிறார்.

விஜயகாந்த் அடிக்கக் காரணம் இவர்தான்!
விஜயகாந்த் தற்போது பலரை அடிக்கிறார் என்றால் அதற்கு காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர். இருவரும் நிறைய படங்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தான் அடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்.

அவர் அடிச்சா இவர் ஞாபகம் வரும்
விஜயகாந்த் ஒருவரை அடித்தார் என்று கேள்விப்படும் போதெல்லாம், எனக்கு உடனே எஸ்.ஏ.சந்திரசேகர் சார் தான் என் நினைவுக்கு வருவார் என்றார் ராதிகா.
ராதிகா சொன்னா சரியாத்தான் இருக்கும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications