வேனில் கருந்திரி கடத்திய டிரைவர் கைது.. போலீஸ் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ஓ. கோவில்பட்டி பகுதியில் கருத்திரி கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ள ஒ.கோவில்பட்டி பகுதியில் ஆமத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வேன் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது வேன் டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

Wick smuggling, driver arrested

இதனால் போலீசார் வேனுக்குள் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி கருந்திரி கடத்துவது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வேனில் இருந்த 100 குரோஸ் கருந்திரி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. வேன் டிரைவர் ஒ.கோவில்பட்டி சீனிவாசன் கைது செய்யப்பட்டார். அவர் யாருக்காக கருந்திரி கொண்டு சென்றார், எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Driver, who trying to smuggling wick, was arrested by police in Virudhunagar.
Please Wait while comments are loading...