துடிக்க துடிக்க கோவிந்தனை அடித்தே கொன்ற மனைவி.. போலீசிடம் சொன்ன பகீர் காரணம்!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மதுபோதையில் தகராறு செய்ததால் கணவனை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் காமராஜ் நகரை சேர்ந்த 43 வயதாகும் கோவிந்தன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மாதம்மாள். இவருக்கு 39 வயதாகிறது. இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், நாகரத்தினம் என்ற மகளும் இருக்கிறார்கள்.

கட்டிடத் தொழிலாளியான கோவிந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவில் குடித்து விட்டு முழு போதையில் வீட்டுக்கு வந்த கோவிந்தன் மனைவி மாதம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த மாதம்மாள், அடுப்பூதும் இரும்பு குழாயால் கணவனின் தலை மீது பயங்கரமாக அடித்துள்ளார். இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். மனைவி கைது செய்யப்பட்டார்.
மனைவி கைது
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தொப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் மாதம்மாளை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிந்தன் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால் அவர் இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்ததாக மாதம்மாள் கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாளை கைது செய்தனர்.
மதுபோதையில் தகராறு செய்த கணவனை இரும்பு குழாயால் அடித்து மனைவியே கொலை செய்த பயங்கர சம்பவம் நல்லம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications