இதெல்லாம் வேணாம்மா.. எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேக்கலியே.. குறுக்கே வந்த "மூன்றாவது கை".. ஷாக்கிங்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: திருமணத்தை மீறி உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்துள்ள நெல்வாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த விவேக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் விவேக்கும், ஈஸ்வரியும் சேர்ந்து நெல்வாய்ப்பாளையத்திலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். விவேக்கிற்கு குழந்தைகள் மீதும், குடும்பத்தின் மீதும் பாசம் அதிகம். ஆனால் பணிச்சூழல் மிகவும் டைட்டாக இருக்கும்.

எனவே மனைவியிடமும், குடும்பத்துடனும் சரியாக நேரத்தை ஒதுக்க முடியாமல் தவித்து வந்திருக்கிறார். அதேநேரம் இவருக்கு குடி பழக்கமும் இருந்திருக்கிறது. இந்நிலையில்தான் ஈஸ்வரிக்கும், இதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஏகாம்பரத்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். தொடக்கத்தில் மாதம் ஒரு முறை என்றிருந்த இந்த சந்திப்பு நாளடைவில் வாரத்திற்கு ஒரு முறை என்று இருவரும் சந்திக்க தொடங்கியுள்ளனர்.

திருமணத்தை மீறிய உறவு

திருமணத்தை மீறிய உறவு

இது இவ்வாறு இருக்க, மறுபுறும் கணவர் விவேக்கிற்கு இந்த சம்பவம் அரசல் புரசலாக காதுகளுக்கு எட்டியிருக்கிறது. ஏற்கனவே குடிப்பழக்கம் கொண்ட விவேக் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, மனைவியை கடுமையாக தாக்கியிருக்கிறார். இதனையடுத்து பிரச்னை ஓரளவு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் எல்லாம் சில நாட்கள்தான். மீண்டும் ஈஸ்வரியும், ஏகாம்பரமும் தனிமையில் சந்தித்துக்கொண்டுள்ளனர். இந்த முறை கணவர் விவேக்கிற்கு இந்த விஷயம் அவ்வளவு சீக்கிரம் தெரியவில்லை. ஆனால், 4 மாதங்களுக்கு பின்னர் விவேக் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டியிருக்கிறது. இந்த முறை பிரச்னை பெரியதாக வெடித்திருக்கிறது.

ஆண் நண்பர்

ஆண் நண்பர்

அதாவது ஈஸ்வரியின் தாய் வீட்டில் ஏகாம்பரம் சென்று முறையிட்டுள்ளார். மட்டுமல்லாது ஈஸ்வரியை தாய் வீட்டிற்கே அனுப்பி வைப்பதாகவும் கூறியிருக்கிறார். எனவே இம்முறை ஈஸ்வரியால் எதையும் சமாளிக்க முடியவில்லை. ஒரு மாதம் வரை ஈஸ்வரி தாய் வீட்டில் இருந்திருக்கிறார். பின்னர் மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார். இப்படி வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் விவேக் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதாவது ஈஸ்வரி காலையில் கண் முழித்தபோது விவேக் மூச்சற்ற நிலையில் இருந்திருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி சத்தமாக ஓலமிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினருக்கு அதன் பின்னர்தான் விவேக் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

பின்னர் அவர்கள் போலிசுக்கு கொடுத்த தகவிலின் பேரில் விவேக்கின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் விவேக் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரிழந்ததாக ஈஸ்வரி கூறியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதற்கான தடயங்கள் ஏதும் இல்லையென மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதன் பின்னர் காவல்துறையினர் தங்களது கிடுக்குபிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது ஈஸ்வரி சொன்ன தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "ஈஸ்வரிக்கும் ஏகாம்பரத்திற்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது.

கொலை

கொலை

இது ஊர் முழுவதும் ஏற்கனவே தெரிந்துள்ளது. கடைசியாக விவேக்கின் காதுகளுக்கும் எட்டியிருக்கிறது. பின்னர்தான் பிரச்னை பெரியதாக வெடித்திருக்கிறது. விவேக் தனது மனைவி ஈஸ்வரியிடம் இந்த பிரச்னையை விட்டுவிடும்படி கூறியிருந்தார். ஆனால் ஈஸ்வரி கேட்கவில்லை. எனவே சண்டை பெரியதாக வெடித்திருக்கிறது. இதன் பின்னர் ஈஸ்வரி ரகசிய திட்டம் போட்டிருக்கிறார். விவேக்கை கொலை செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம். எனவே ஏகாம்பரத்தை நள்ளிரவில் வரவைத்து ஈஸ்வரி தனது கணவன் விவேக்கை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்" என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+