கணவரை கொலை செய்துவிட்டு அவர் வாங்கி வந்த சாப்பாட்டை கள்ளக்காதலனோடு அமர்ந்து சாப்பிட்ட மனைவி
Recommended Video

வேலூர்: ராணிப்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை பெல் நரசிங்கபுரம் அருகே உள்ள சர்ச்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு வில்சன் ( 28) என பெயயர் மாற்றம் செய்துகொண்டார். வெல்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு ரம்யா (23) என்ற மனைவி. 6 வருடமாகியும் குழந்தை இல்லாததால் 2 வயதில் பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3ம் தேதி சிப்காட் மணியம்பட்டு அருகே கிணற்றில் வில்சன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரை யாரோ அடித்துக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அருண்குமார் கொலைக்கு அவரது மனைவி ரம்யாவும், அவரது கள்ளக்காதலனுமே காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிப்காட் போலீசார் ரம்யாவையும், அவரது கள்ளக்காதலன் தாமஸ் ஆல்வா எடிசன் (27) என்பவரையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சங்கீத்குமார், சரத்குமார், ரஜினி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கள்ளக்காதலை வில்சன் கண்டித்ததால், கொலை செய்து கிணற்றில் தள்ளியதாகவும், அடித்த போது உயிர் இருந்ததாகவும், கிணற்றுக்குள் கிடந்து வில்சன் இறந்திருப்பார் என்றும் கூறி போலீசையே திடுக்கிட வைத்தார் ரம்யா.
கணவன் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்தபோது அவரை அடித்து கிணற்றில் தள்ளியதாகவும், பிறகு அந்த சாப்பாடை கள்ளக்காதலனுடன் சேர்ந்து சாப்பிட்டதாகவும் கூறி மற்றொரு அதிர்ச்சியை பரிசாக அளித்தார் ரம்யா. மனசாட்சி என்பதே இல்லாத அளவுக்கு மக்கள் மனநிலை மாறிவிட்டதா என்று கேட்பதை போல உள்ளது இந்த சம்பவம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications