Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூலிப்படைக்கு கதவைத் திறந்து விட்டு கணவரைக் கொலை செய்த மனைவி - கள்ளக்காதலனுடன் கைது

Subscribe to Oneindia Tamil

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளக்காதலனுடன் சந்தோஷமாக இருப்பதற்கு பெரும் தடையாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டியுள்ளார் ஒரு பெண்.

தற்போது இந்தப் பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

துடிக்கத் துடிக்க தனது கணவர் செத்துப் போனதை இந்தப் பெண் வேடிக்கையும் பார்த்துள்ளார் என்பது கொடுமையானது.

கொலை செய்யப்பட்ட கணவர்:

ராமநத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பெயர் பரமேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளனர். தங்கராஜ் தனது வீட்டில் மர்மமா முறையில் பிணமாகக் கிடந்தார். யாரோ வந்து தனது கணவரைக் கொன்று விட்டதாக போலீஸாரிடம் கூறினார் பரமேஸ்வரி.

கூலிப்படையால் கொலை:

ஆனால் அவர் சொல்வது பொய் என்பதை உடனடியாக கண்டுபிடித்து விட்டனர் போலீஸார். இதையடுத்து பரமேஸ்வரியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் உண்மையைக் கக்கி விட்டார். தனது கணவரை கள்ளக்காதலன் ரவிச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து ஆள் வைத்துக் கொன்றது நான்தான் என்று கூறி விட்டார்.

ஏழ்மையான குடும்பம்:

இதுகுறித்து பரமேஸ்வரி போலீஸாரிடம் கூறுகையில், "எனது சொந்த ஊர் திருமலை அகரம். நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நான் பிளஸ்-2 படித்து கொண்டிருந்த போது 1999 ஆம் ஆண்டு தங்கராஜ் வீட்டில் இருந்து என்னை பெண் கேட்டு வந்தனர். உடனே என்னை திருமணம் செய்து வைத்தனர்.

வெளிநாட்டில் வேலை:

அப்போது தங்கராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். திருமணம் முடிந்ததும் சில மாதங்கள் கழித்ததும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் நான் தனியாக இருக்க நேரிட்டது.

தங்கைக்கும் திருமணம்:

இந்த நிலையில் எனது தங்கைக்கு திருமணம் நடந்தது. அந்த திருமண ஏற்பாட்டை எனது உறவினர் ரவிச்சந்திரன் செய்தார். அவர் எனக்கு மாமன் மகன் ஆவார்.

நண்பர்கள் போல் பழக்கம்:

தங்கை திருமணத்தின் போது எங்கள் வீட்டிலேயே இருந்து தேவையான உதவிகளை செய்தார். அப்போது ரவிச்சந்திரனுடன் பேச வேண்டியிருந்தது. இருவரும் நண்பர்கள் போல பழகினோம்.

காதலர்களாக மாற்றம்:

எனது கணவர் வெளியூரில் இருந்ததால் ரவிச்சந்திரனின் ஆதரவு எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. எனவே அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் காதலர்களாக மாறினோம்.

காதலனின் மனைவி:

அதைத் தொடர்ந்து அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இது எனது கணவருக்கோ, குடும்பத்தினருக்கோ தெரியாது. ஆனால் இந்த விஷயம் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரவிச்சந்திரனின் மனைவிக்கு தெரிந்து விட்டது. அவர் தனது தந்தையிடம் சென்று கூறினார்.

ரவிச்சந்திரனிடம் தகராறு:

இதையடுத்து கோபமடைந்த ரவிச்சந்திரனின் மனைவி வீட்டார் திரண்டு வந்து ரவிச்சந்திரனிடம் தகராறு செய்தார்கள். என்னையும் எச்சரித்தார்கள். இதனால் எங்கள் கள்ளக்காதல் விவகாரம் ஊரில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் வெளிநாட்டில் இருந்த எனது கணவருக்கு தெரிவித்து விட்டனர்.

ரகசியமாக செல்போன்:

இதனால் கணவர் தங்கராஜ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துவிட்டார். என்னை மிகவும் கண்டித்தார். எனது செல்போனையும் பறித்து கொண்டார். இதன் பிறகு என்னால் ரவிச்சந்திரனை சந்திக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. இதையடுத்து ரவிச்சந்திரன் எனக்கு செல்போன் சிம்கார்டு ஒன்றை ரகசியமாக வாங்கி கொடுத்தார்.

ஊரில் இல்லாதபோது உல்லாசம்:

எனது கணவர் ஊரில் இல்லாத நாட்களில் அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். இருவரும் உல்லாசமாக இருந்தோம். இந்த விஷயம் கணவருக்கு தெரிந்துவிட்டது. எனவே என்னை துன்புறுத்தினார். எனது செல்போன் சிம்கார்டையும் பறித்துக் கொண்டார்.

கொடுமைப்படுத்திய கணவர்:

ஆனாலும் எப்படியாவது ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசி வந்தேன். இதை அறிந்த கணவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். நான் வெளியே எங்கும் செல்லவிடாமல் பார்த்து கொண்டார். காதலனை சந்திக்க முடியாமல் தவித்தேன். இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது, இவரை தீர்த்து கட்டினால் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கருதினேன்.

கொலை செய்ய ஏற்பாடு:

இதுபற்றி ரவிச்சந்திரனை ரகசியமாக தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் கணவரை கொலை செய்வதற்கு ஒத்துக்கொண்டார். அவர் தங்கராஜைக் கொல்ல கூலிப்படையை ஏற்பாடு செய்தார். 9 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ஊரில் அனைவரும் தூங்கிவிட்ட நிலையில் கூலிப்படையை ரவிச்சந்திரன் அனுப்பி வைத்தார்.

வராண்டாவில் படுக்கும் கணவர்:

எனது கணவர் எப்போதுமே வீட்டு வராண்டாவில் படுப்பது வழக்கம். அவர் தூங்கிவிட்டதை உறுதி செய்து கூலிப்படையினருக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் வீட்டுக்குள் வருவதற்காக கதவை திறந்து வைத்தேன்.

அலறல் சத்தம் கேட்ககூடாது:

எனது மகனை உள் அறைக்குள் படுக்க வைத்திருந்தேன். கூலிப்படையினர் உள்ளே வந்ததும் அவரை சரமாரியாக வெட்டினார்கள். அவருடைய அலறல் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக டி.வி. ஒலியை அதிகப்படுத்தி வைத்தேன்.

கொலை செய்த கூலிப்படையினர்:

ஆனாலும் வீட்டின் அறைக்குள் படுத்திருந்த எனது மகன் சத்தம் கேட்டு வெளியே வந்தான். அவனிடம் ஒன்றுமில்லை. நீ படுத்துக்கொள் என்று கூறி அறைக்குள் அனுப்பி வைத்தேன். கூலிப்படையினர் அவரை கொன்றுவிட்டு வெளியே புறப்பட்டார்கள்.

நாடகம் ஆடிய மனைவி:

நான் படுத்துள்ள அறையை வெளியே பூட்டிவிட்டு செல்லுமாறு அவர்களிடம் கூறினேன். அதன்படி அவர்கள் அறையை பூட்டிவிட்டு சென்றனர். வழக்கம் போல காலையில் எழுந்து எதுவும் தெரியாதது போல நாடகம் ஆடினேன் என்று கூறியுள்ளார்.

தற்போது போலீஸார் ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+