குடியை கெடுக்க நினைத்த குடிகார கணவனைக் கொன்ற மனைவி - கத்தியோடு சரண்
தர்மபுரி: கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கொடுமைப்படுத்தியதால்,அவரை கொலை செய்துள்ளார் அவரது மனைவி.இச்செய்தி தர்மபுரியில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்துள்ள தீர்த்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான சின்னத்தம்பிக்கு தினமும் குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் பெங்களூரூவுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு திரும்பினர். அப்போதும் கூலியாக வாங்கிகொண்டு வந்த பணம் முழுவதையும் கொண்டுபோய் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சின்னத்தம்பி மனைவி சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த சாந்திதூங்கி கொண்டிருந்த சின்னத்தம்பியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் தனது கணவரை கொலை செய்த கத்தியோடு பாலக்கோடு போலீஸில் சாந்தி சரண் அடைந்தார்.
இதனையடுத்து சாந்தியின் வீட்டுக்கு சென்ற போலீஸார் சின்னத்தம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சாந்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications