அதெப்படி என் கள்ளக்காதலை தட்டிக் கேட்கலாம்.. கணவர் மீது கொதி நீரை ஊற்றிய மனைவி
திருப்பூர்: கள்ளக்காதலெல்லாம் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. புருஷன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவி தட்டிக் கேட்க முடியவில்லை. கேட்டால் கொலை நடக்கிறது. அதேபோல மனைவி எப்படி நடந்து கொண்டாலும் அதை கணவன் கண்டு கொள்ளக் கூடாது, கேட்டால் புருஷனை விட கள்ளக்காதலன்தான் முக்கியம் என்று ஓடி விடுகிறார்கள் அல்லது ஆளை வைத்து தீர்த்துக் கட்டி விடுகிறார்கள்.
திருப்பூரில் இப்படித்தான் ஒரு பெண் தனது கள்ளக்காதலை தட்டிக் கேட்ட கணவர் மீது கொதிக்கும் நீரை எடுத்து ஊற்றியுள்ள செயல் நடந்துள்ளது.
பெரியாண்டிபாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சக்திவேல். 42 வயதான இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி பெயர் மாரியம்மாள். 40 வயதாகும் இவருக்கும், இன்னொரு நபருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இது சக்திவேலுக்குத் தெரிய வரவே அதிர்ச்சி அடைந்த அவர் மாரியம்மாளைத் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.
நான் அப்படித்தான் இருப்பேன் என்று மாரியம்மாள் அடம் பிடிக்க, சத்தம் போட்டுள்ளார் சக்திவேல். அதைக் கேட்டு கோபமடைந்து கொதித்துப் போன மாரியம்மாள் அடுப்பில் இருந்த கொதி நீரை எடுத்து அப்படியே சட்டியோடு, சக்திவேல் மீது ஊற்றி விட்டார்.
சக்திவேல் முகத்திலும், கையிலும் கொதி நீர் பட்டு துடித்தார். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சக்திவேல். அதன் பேரில் போலீஸார் மாரியம்மாளைக் கைது செய்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications