முண்டந்துறையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்.. உயிர் அபாயத்தில் வனவிலங்குகள்
நெல்லை: முண்டந்துறை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதால் அவற்றின் மூலம் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே முண்டந்துறை வனப்பகுதியில் அமைந்துள்ளது கரையார் சொரிமுத்து அய்யனார் கோயில். இங்கு கடந்த 14ம் தேதி முதல் ஆடி அமாவாசை திருவிழா நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இபபகுதி புலிகள் காப்பக பகுதியாக இருப்பதால் வனதுறையினர் இங்கு வரும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

மேலும் பாபநாசம் மற்றும முண்டந்துறை சோதனை சாவடி, முண்டந்துறை வன அலுவலகம், எஸ்எம் கோயில் பீட் ஆகிய 4 இடங்களில் பக்தர்களிடம் சோதனை நடத்தி பிளஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆனால் இதையெல்லாம் மீறி கோயில் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. வனத்துறையினர் இவற்றை அகற்றாததால் வன விலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு வருகின்றன. இதனால் அவற்றின் உயிருக்கு ஆபதது ஏற்படும் சூழ்நிலை ஏறபட்டுள்ளது.

இதனால் வனத்துறையினர் உடனடியாக அங்கு குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அ்ப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேணடுகோள் விடுத்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications