மத்திய அரசைக் கண்டித்து அதிமுக எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா...?

முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஒருபக்கம் இடிக்க உத்தரவிட்டுள்ள அதிமுக அரசு மறுபக்கம், காமன்வெல்த் விவகாரத்தை வைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி தர முயலுவதாக கருதப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக நேற்று சட்டசபையைக் கூட்டி மத்திய அரசை சாடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை பிரதமருக்கும் முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.
இருந்தும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று இலங்கைக்குக் கிளம்பி்ப் போய் விட்டார். இதனால் அதிமுக தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து அடுத்தடுத்து மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையிலான நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் ஒரு க்டடமாக, அதிமுக எம்.பிக்கள் அத்தனை பேரும் ராஜினாமா செய்வது, டெல்லியில் போராட்டம் நடத்துவது என்று பேச்சு அடிபடுகிறது.
அதிமுகவுக்கு நாடாளுமன்றத்தில் மொத்தம் 16 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 9 பேர் லோக்சபா எம்.பிக்கள், மற்ற 7 பேரும் ராஜ்யசபா எம்.பிக்கள் ஆவர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா முற்றிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி சட்டசபையைக் கூட்டி தீர்மானம் போட்டும்அதை மத்திய அரசு கண்டு கொள்ளததால் அதிருப்தி அடைந்துள்ள அதிமுக, எம்.பிக்களை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வைத்து டெல்லியில் பரபரப்பைக் கிளப்பவும், டெல்லியில் எம்.பிக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்து உறுதியான தகவல் ஏதும் இல்லை. அதேசமயம், இப்படி ஒரு திட்டத்தை அதிமுக செயல்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications