திமுக-காங். இடையே இன்று அல்லது நாளை தொகுதி உடன்பாடு ஏற்படும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
கோவை: திமுகவுடன் இன்று அல்லது நாளை தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்தது. அதே நேரத்தில் தமாகாவும் திமுக கூட்டணிக்கு வரக்கூடும் எனவும் கூறப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையான அதிருப்தியடைந்தது. இந்நிலையில் திமுக கூட்டணியில் தமாகா இடம்பெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுகவுடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை; தொகுதிப் பங்கீட்டிலும் பிரச்சனை இல்லை;
திமுகவுடன் இன்று அல்லது நாளை தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications