கருணாநிதிக்கு எதிராக திருவாரூரில் களமிறங்க தயார்: முத்தரசன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக திருவாரூரில் போட்டியிட்ட கருணாநிதி 50 ஆயிரத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் கருணாநிதி களமிறங்குகிறார்.

 Will contest against Karunanidh: Mutharasan

இதனிடையே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியில் திருவாரூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட உள்ளதாக மக்கள் நல கூட்டணி-தேமுதிக கூட்டணி தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து திருவாரூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+