சசி குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு சிறை?... இன்று தம்பி திவாகரன் மீதான கடத்தல் வழக்கில் தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 40. இவர், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக நாகை கிளையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் தங்கை மகள் யாழினி. 22 வயதான இவர் மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியில் படித்து வந்தார்.
அப்போது, ஒருவரை காதலித்து யாழினி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக, சரவணனை கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, திவாகரனின் ஆட்கள் கடத்திச் சென்று மிரட்டியும், கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாகக் கூறியும், 1 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக எடையூர் போலீசில் சரவணன் புகார் செய்தார்.
இந்த வழக்கில் திவாகரன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு மன்னார்குடி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வருகிறது.
மன்னார்குடியைச் சேர்ந்த திவாகரன், சசிகலாவின் தம்பி ஆவார். ஏற்கனவே சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்குப் போய் விட்டனர். இந்த வரிசையில் திவாகரனும் சேருவாரா என்பது இன்று தெரியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications