சந்திரகுமார் தலைமையில் அணி திரண்ட எம்.எல்.ஏக்கள், 10 மா.செக்கள்: உடைந்தது தேமுதிக
சென்னை: திமுகவினர் விரிக்கும் மாயவலையில் வீழ்ந்து விடாதீர்கள். அங்கே போனால் வெறும் சால்வைதான் மிஞ்சும் என்று ஈரோட்டில் சந்திரகுமாரை வைத்துக்கொண்டுதான் பேசினார் பிரேமலதா. ஆனால் அவர் சொல்லி 24 மணிநேரம் கூட முடியவில்லை அதற்கு சந்திரகுமார் தலைமையில் புது அணியே உருவாகிவிட்டது.
தேமுதிகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார், கும்மிடிபூண்டி சேகர், மேட்டூர் பார்த்திபன் ஆகிய எம்.எல்.ஏக்களும், ஈரோடு வடக்கு-தெற்கு, திருவண்ணாமலை, வேலூர், சேலம் மேற்கு, திருப்பூர் மாவட்டச் செயலாளர்களும் விஜயகாந்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் இன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துக் கொண்டு இருப்பவர் தேமுதிக கட்சியின் மகளரணி செயலாளர் பிரேமா லதா விஜயகாந்த்.
தேமுதிக கட்சித் தலைவராக விஜயகாந்த் இருபிரச்சாரங்களை மேற்கொள்வது என அனைத்துப் பணிகளையும் நடத்திக் கொண்டு இருக்கிறார் பிரேமலதா.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையில், சதவீதத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக திகழ்ந்து வருகிறது. தலைமை என்ற அடையாளத்துடன், தனித்துவத்துடன் நின்றால்தான் அதை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற கணக்கில் இந்த முறை மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
இது தேமுதிக நிர்வாகிகளிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ். குமரி மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரேமலதா, திமுக பொருளாளர் ஸ்டாலினை கடுமையாக சாடி வருகிறார்.
சட்டசபைத் தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் விஜயகாந்த் வீட்டு வாசலில் வந்து நிற்கும் நிலை ஏற்படும் என்று கூறும் பிரேமலதா, தளபதி என்றால் நேருக்கு நேராக நின்று சண்டை போடவேண்டும் இப்படி மறைமுகமாக ஆட்களை இழுக்கக் கூடாது என்று மேடை தோறும் பேசி வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் திமுக மாயவலை விரிக்கிறது யாரும் சிக்கிவிடாதீர்கள் என்று கூறியதோடு அங்கு போனால் சால்வைதான் மிஞ்சும் என்றும் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் பேசினார் பிரேமலதா.
அந்த மேடையில் பேசிய சந்திரகுமார் அதிமுகவைத்தான் அதிகம் விமர்ச்சித்தார் ஆனால் திமுக பற்றி எதுவுமே கூறவில்லை. இந்த நிலையில் திமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும், மநகூ உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சந்திரகுமார் கெடு விதித்துள்ளார்.
சில எம்.எல்ஏக்கள், 10 மாவட்ட செயலாளர்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டு புது அணியை உருவாக்கி விட்டார். கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் தலைமையிலான அணியில் கும்மிடிபூண்டி சேகர், மேட்டூர் பார்த்திபன் ஆகிய எம்.எல்.ஏக்களும், ஈரோடு வடக்கு-தெற்கு, திருவண்ணாமலை, வேலூர், சேலம் மேற்கு, திருப்பூர் மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் விஜயகாந்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
நாங்கள் தேமுதிகவை விட்டு விலகவில்லை என்று கூறும் சந்திரகுமார் அணியினர் நாளை பிற்பகல் வரை கெடு விதித்துள்ளனர். இதன் மூலம் தேமுதிக உடைந்து சந்திரகுமார் தலைமையிலான அணி உருவாவது உறுதியாகிறது. இந்த அணி அப்படியே திமுகவில் இணையும் என்றும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications