"அவமானம்" 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா அறிவிப்பு.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி தப்புமா?
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் ஒரே நேரத்தில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம் சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

மஸ்தான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலை பொருத்தமட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சாராய வியாபாரி மரூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அது மட்டுமல்லாமல் அமைச்சர் மஸ்தான் குறித்து திமுக தலைமைக்கு அந்த 13 கவுன்சிலர்களும் புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடந்தது. அப்போது 7ஆவது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் புனிதா, தனது வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்திருந்தார்.
நகர்மன்றக் கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் 13 பேரும் தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை. அதனால் பொதுமக்கள் மத்தியில் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. முதல்வர் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நகர்மன்றம் செயல்படுகிறது.
இதனால் நாங்கள் எங்கள் ராஜினாமா கடிதத்தை 13 பேரும் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்க போகிறோம் என கூறினர். இதையடுத்து அவர்கள் ராஜினாமா கடிதத்தை உயர்த்தி காட்டிவிட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் நாங்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்று 18 மாதங்கள் ஆகின்றன. நகராட்சி எங்கள் வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வானை கேளுங்கள் என்கிறார்கள். இவருடைய தலையீடு அதிகமாக இருக்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது செஞ்சி பேரூராட்சியில் தனது மகன் மொக்தியார் அலி மஸ்தானை களமிறக்கி ஜெயிக்க வைத்தார் அமைச்சர். இதனால் அவர் செஞ்சி பேரூராட்சி தலைவராக உள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் மொக்தியார் அலி மஸ்தான் உள்ளார்.
மேலும் அமைச்சர் மஸ்தானுக்கு உதவியாளராக இருந்து வரும் மருமகன் ரிஸ்வான் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். அமைச்சரின் குடும்பத்தினரே கட்சி பொறுப்புகளில் இருந்து வருவதால் கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் திமுக நகராட்சி தலைவர் நிர்மலாவின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரன் அந்த 13 பேரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதே இல்லை. வேண்டுமென்றே மஸ்தான் மீதும் ரிஸ்வான் மீதும் வீண் அவதூறு பரப்புகிறார்கள் என ரவிசந்திரன் கூறியுள்ளார். இதனால் திமுக தலைமை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரிக்க விடுத்து பிரச்சினைகளை சரி செய்ய சொல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மஸ்தான் கருணாநிதி காலத்திலிருந்தே நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை பாயாமல் எச்சரிக்கை விடுக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். எனினும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக தொண்டர்கள் இப்படி அதிருப்தியில் இருந்தால் அது கட்சியின் வெற்றியை பாதிக்கும் என திமுக நிர்வாகிகள் கருதுகிறார்கள்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications