கள்ளக்குறிச்சியில் 'அம்மா'....?
விழுப்புரம்: முதல்வர் ஜெயலலிதா கள்ளக்குறிச்சி தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பு அத்தொகுதியில் ஏற்பட்டுள்ளது.
இதை அதிகப்படுத்துவது போல அங்கு சுவர் விளம்பரங்களையும் இப்போதே அதிமுகவினர் செய்து வருவதால் அதிமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற கட்சியினரிடமும் கூட பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
குறிப்பாக தேமுதிகவின்தான் சற்று டென்ஷனாக காணப்படுகிறார்கள். காரணம், விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் அத்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியினர் கருதுவதால்.

2 மாவட்டத் தொகுதி
கள்ளக்குறிச்சி தொகுதியானது 2 மாவட்டங்களில் கால் பரப்பி உள்ள தொகுதியாகும். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், ஏற்காடு, சங்கராபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இத்தொகுதியின் கீழ் வருகின்றன.

4 அதிமுக.. 2 தேமுதிக
இத்தொகுதியில் நான்கு தொகுதிகளை அதிமுகவும், 2 தொகுதிகளை தேமுதிகவும் வைத்துள்ளன.

கேப்டன் தொகுதி இங்கேதான்
விஜயகாந்த்தின் தொகுதியான ரிஷிவந்தியம் இந்தத் தொகுதியின் கீழ்தான் வருகிறது.

ஒரு அமைச்சர்.. ஒரு எதிர்க்கட்சித் தலைவர்
ரிஷிவந்தியம் தொகுதியின் விஜயகாந்த் சட்டசபை எதிர்க்கட்சி்த் தலைவராக இருக்கிறார். சங்கராபுரம் தொகுதியின் மோகன், ஊரக தொழில்துறை அமை்சராக இருக்கிறார்.

பிரேமலதாவின் சொந்த ஊர் இந்தப் பக்கம்தான்
விஜயகாந்த்தின் மனைவியான பிரேமலதாவின் சொந்த ஊர் சங்கராபுரம் தாலுகாவுக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு கிராமம் ஆகும். எனவேதான் சுதீஷும் சரி, விஜயகாந்த்தும் சரி இந்தப் பக்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தக் காரணத்தால்தான் விஜயகாந்த்தும், ரிஷிவந்தியத்தில் போட்டியிட முடிவு செய்தார்.

சுதீஷ் போட்டியிடத் திட்டம்
வரும் லோக்சபா தேர்தலில் சுதீஷ் இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர் நிற்காவிட்டால் பிரேமலதா நிற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுதீஷ் போட்டியிடத் திட்டம்
வரும் லோக்சபா தேர்தலில் சுதீஷ் இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர் நிற்காவிட்டால் பிரேமலதா நிற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் திடீரென...
இந்த நிலையில் ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் அதிமுகவினர் திடீர் சுவர் விளம்பரங்கள் மூலம் கவனம் ஈர்க்க ஆரம்பித்துள்ளனர். அதாவது நடைபெறவுள்ள, 2014 லோக்சபா தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும், நாளைய பிரதமர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அந்த வாசகங்கள் கூறுகின்றன.

நிஜமாகவா...
இதனால் ஜெயலலிதா கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அல்லது, தேமுதிகவினர் மத்தியில் கிலியைக் கிளப்ப இப்படி சும்மானாச்சுக்கும் எழுதி வைக்கிறார்களா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
சொல்ல முடியாது.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications