ம.ந.கூட்டணியின் ஒரு கட்சி திமுக பக்கம் சாய்ந்துவிட்டது... உதயசூரியனை பம்பரம் ஆதரிக்குமா?
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்து செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை : சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் திமுகவுடன், மதிமுக கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்கள் நலக் கூட்டணி கலைக்கப்பட்ட பின்னர் திமுகவுடன் நட்பு பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்து விட்ட நிலையில், அடுத்து அந்த கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளை நோக்கி அரசியல் விமர்சகர்களின் பார்வை திரும்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவருடைய இரும்புக் கோட்டையான ஆர்.கே நகர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. உண்மையிலேயே அதிமுகவின் பலம் என்ன, மற்ற கட்சிகளின் பலம் என்ன என்பதை தீர்மானிக்கப் போகும் தேர்தலாகவே இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாத இடைத்தேர்தல் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஈகோ போராக பார்க்கப்பட்ட நிலையில் 7 மாதத்தில் அரசியல் சக்கரம் மாறி விட்டது. இப்போது இந்த இடைத்தேர்தல் அதிமுக, அதிமுகவை நழுவ விட்ட தினகரன் அணி இடையிலான கடுமையான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த அணிகளின் போட்டியால் அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்பதால் எதிர்க்கட்சியாக பலமான கூட்டணி அமைத்து வெற்றி பெற திட்டம் போடுகிறது திமுக.

விடுதலை சிறுத்தைகள் ஆதரவு
திமுகவிற்கு காங்கிரஸ், மனிதநேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது 3வது கூட்டணி அமைத்த மக்கள் நலக் கூட்டணி பிளவுபட்ட நிலையில் அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்யப் போகிறார்கள்?
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன. இதற்கிடையில் மக்கள் நலக்கூட்டணியும் பிளவுபட்ட நிலையில் திமுகவுடன் இந்த கட்சிகள் கைகோர்க்கும் என்று சொல்லப்பட்டது. கடந்த முறை ஆர்.கேநகர் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தனிதது களத்தில் போட்டியிட்டது,இந்நிலையில் இந்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மதிமுக கூட்டணி வைக்குமா?
இதே போன்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் முரசொலி பவளவிழா நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இதன் மூலம் அவர் திமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று அப்போது முதலே அரசியல் வட்டாரத்தில் பரபரப்புகள் கிளம்பின. இந்நிலையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதிமுக திமுகவிற்கு ஆதரவு தருமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வைகோவின் தேர்தல் நிலைப்பாடு?
இதனிடையே டிசம்பர் 3ம் தேதி கட்சியின் உயர்மட்டக் குழு கூடி தேர்தலில் போட்டியா அல்லது ஆதரவா என்பதை முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதயசூரியனோடு பம்பரம் இணையுமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்பதை பொருத்தே வைகோவின் அடுத்தகட்ட தேர்தல் நிலைப்பாடுகளும் இருக்கும் என்று கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
-
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி











Click it and Unblock the Notifications