பாஜக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? 29ம்தேதி இறுதி முடிவு
சென்னை: பாஜக கூட்டணியில் மதிமுக நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 29ம்தேதி நடைபெறும் அக்கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு வித்திட்டு முதலில் துண்டை போட்டு சீட்டை பிடித்தது மதிமுகதான். இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கடைபிடித்த தமிழர் விரோத போக்கை பாஜக ஆட்சி ஏற்பட்டால் சரி செய்யலாம் என்று வைகோ நினைத்தார். ஆனால் மோடியின் பதவியேற்வு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது வைகோவை ஆத்திரமடைய செய்தது. மோடி, ராஜ்நாத்சிங் என பாஜக உயர்மட்ட தலைவர்களை சந்தித்து ராஜபக்சேவுக்கு அளித்த அழைப்பை திரும்ப பெறுமாறு வைகோ கேட்டுக் கொண்டார். ஆனால் பலனில்லை.

இதையடுத்து ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த வைகோ முடிவு செய்துள்ளார். மதிமுகவின் கொள்கைக்கு எதிராக பாஜக செயல்படுவதாக கருதும் வைகோ, தனது கட்சியின் உயர் நிலை குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வரும் 29ம்தேதி கூட்டியுள்ளார். உயர் நிலை குழு கூட்டம் அன்றைய தினம் காலை 9 மணிக்கும், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 11 மணிக்கும் நடைபெறுகிறது. கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி இதற்கு தலைமை வகிக்கிறார். சென்னையிலுள்ள, கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
பாஜக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து இடம்பெறுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இதில் முடிவெடுக்கப்படும். தேர்தலில் தோல்வியடைந்த, வைகோவுக்கு ராஜ்யசபா சீட் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் கட்சி எடுக்கும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications