வென்றது அதிமுக - திமுக தவிர எல்லா வேட்பாளர்களுக்கும் டெபாசிட் “காலி”!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி முடிவடைந்துள்ள நிலையில் வெற்றிபெற்ற அதிமுக மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள திமுக கட்சியின் வேட்பாளர்களைத் தவிர மற்ற 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.
ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்தபட்சம் 36 ஆயிரத்து 882 ஓட்டுகள் பெற்றால்தான் டெபாசிட்டினைத் திரும்பப் பெற முடியும் என்ற நிலையில், அதிமுக, திமுக தவிர வேறு எந்த வேட்பாளரும் 5 இலக்க வாக்குகளைப் பெறவில்லை. இதில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் அடக்கம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றத்தினால் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா சிறை தண்டனை பெற்ற நிலையில் அவருடைய ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் வளர்மதி, திமுக சார்பில் ஆனந்தன், பாஜக சார்பில் சுப்ரமணியன், மார்சிஸ்ட் சார்பில் அண்ணாத்துரை உட்பட 29 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 13 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் மொத்தம் 2,21,172 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. டெபாசிட் பெற வேண்டுமானால் குறைந்தது 36,882 ஓட்டுக்களாவது பெற வேண்டும் என்ற நிலையில் அதிமுக, திமுக கட்சிகளைத் தவிர பாஜக, சிபிஎம், டிராபிக் ராமசாமி உட்பட மற்ற 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications