முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு மிடாஸை உதறுவாரா சசிகலா?
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள சசிகலா கட்டுப்பாட்டில் மிடாஸ் மதுபான தொழிற்சாலை உள்பட 13 நிறுவனங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாராய ஆலை அதிபராக இருந்து கொண்டு முதல்வராக சசிகலா பதவி வகிக்க முடி
சென்னை: சசிகலா நடராஜனாக இருந்து ஜெயலலிதாவின் தோழி உடன்பிறவா சகோதரியாகி, அதிமுகவினரின் "சின்னம்மா"வான சசிகலா, அதிமுக பொதுச்செயலாளரானார். விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
சசிகலாவின் வலதுகரமாக இப்போது இருப்பது சிவகுமார். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவின் கணவர்தான் இந்த சிவகுமார். இவர்தான் 'மன்னார்குடி வகையறாக்களின்' 13 கம்பெனிகளையும் நிர்வகித்து வருகிறார்.
இக்கம்பெனிகளில் ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டிவியின் மாவிஸ் சாட்காம் ஆகிய இரண்டில் சசிகலா முக்கிய பங்குதாரரர். அதேபோல் சசிகலாவின் மற்றொரு சகோதரர் ஜெயராமனின் மருமகன் கே. கார்த்திகேயனும் மன்னார்குடி வகையறாக்களின் பெரும்பாலான கம்பெனிகளின் போர்டில் இடம்பெற்றிருப்பவர்.

மாவிஸ் சாட்காம்
1998ஆம் ஆண்டு ஜெயா டிவியை தொடங்கியது மாவிஸ் சாட்காம். இதன் போர்டில் சிவகுமாரும் கார்த்திகேயனும் இடம்பெறவில்லை. ஆனால் சிவகுமாரின் மனைவி பிரபா சிவகுமார்தான் நிர்வாக இயக்குநர். பிரபாவின் சகோதரி அனுராதாவும் ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். அனுராதா, சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மூத்த மகனான டிடிவி தினகரனை திருமணம் செய்துள்ளார். இந்நிறுவனத்தில் 81% பங்குகளை வைத்திருப்பவர் சசிகலா.

மன்னார்குடி குடும்பம்
சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனங்கள் ஜெயா டிவியின் மாவிஸ் சாட்காமில் தலா 4% பங்குகளை வைத்துள்ளன. எஞ்சிய பங்குகள் 'மன்னார்குடி குடும்பத்தினரிடமே உள்ளன.

மிடாஸ் கோல்டன் டச் டிஸ்டில்லரீஸ்
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுமாத்தூர் கிராமத்தில் மிடாஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. ஜெயலலிதா 2வது முறையாக முதல்வரான போது 2002ஆம் ஆண்டு இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் என்று இல்லை திமுக ஆட்சியிலும் கூட மிடாஸ் தொழிற்சாலையில் இருந்து மதுபானங்கள் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும்.

வரிசை கட்டும் நிறுவனங்கள்
ஸ்ரீ ஜெயா பைனான்ஸ் நிறுவனம் இளவரசி வசம் 90% பங்குகள் உள்ளன. இந்த நிறுவனம் நீண்டகால கடனாக ரூ15.97 கோடி வாங்கியுள்ளதாம்.
குரியோ ஆட்டோ மார்க் ஏ வோல்ர்ட் ராக் ஆவிரி ப்ராபெர்ட்டீஸ் பேன்சி ஸ்டீல்ஸ் காட்டேஜ் பீல்ட் ரிசார்ட்ஸ் ஸ்ரீஹரி சந்திரா எஸ்டேட்ஸ் ஆகிய கம்பெனிகளும் சசிகலாவின் உறவினர்கள் வசமே உள்ளன.

முதல்வராக உள்ள சசிகலா
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவைப் பயன்படுத்தி சசிகலாவின் குடும்பத்தினர் உருவாக்கிய நிறுவனங்கள் இவை. இவற்றின் ஏகபோக முதலாளியான 'தொழிலதிபர்' சசிகலாதான் இனி தமிழக முதல்வராக பதவி வகிக்கப் போகிறார். இதற்கு சட்டம் இடம் கொடுக்குமா? என்பது கேள்விக்குறியதாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications