தமிழக காங்கிரஸ் தலைமையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை: காங்கிரஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Will talk to parties in TN for LS polls: Congress
சென்னை: காங்கிரஸ் எங்களுக்குத் தேவையில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்து விட்ட நிலையில் தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க மற்ற கட்சிகளுடன் பேசப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கட்சித் தலைமையின் ஆலோசனையின்படி தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார் நாராயணசாமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையி்ல் கூட்டணி அமையும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளுடன் கட்சித் தலைமையின் ஆலோசனையை ஏற்று பேச்சு நடத்துவோம். இதை தமிழக காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளும்.

காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதில்லை என்று திமுக எடுத்த முடிவு அக்கட்சியின் முடிவாகும். அடுத்த கட்சியின் முடிவு குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது.

திமுக எங்களது அமைச்சரவையிலிருந்து சில ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பே விலகி விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததுதான். உறவுகளை அவர்கள் அப்போதே முறித்து விட்டனர். இப்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+