அரசு பள்ளியின் அவலம்: பாடம் படிக்க ஏங்கும் மாணவ-மாணவிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவிகள் பாடம் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ளது வடக்கு முத்தையாபுரம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 20 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இரண்டு ஆசிரியர்களும் உடன்படிக்கையின்படி ஒருவர் மாற்றி ஒருவர் என யாராவது ஒருவர் தான் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

பந்தல்குடி-புதூர் சாலையில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த பள்ளிக்கு தினமும் வரும் ஆசிரியையும் காலையில் தாமதமாக வருகிறார். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காலையில் அவர்களாகவே ஒன்று கூடி இறை வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, செய்தி வாசிப்பு என காலை பிரேயரை முடித்து விட்டு ஆசிரியை வருகைக்காக காத்திருக்கின்றனர். காலையில் தாமதமாக வரும் ஆசிரியை மாலையில் அவசர கதியில் கிளம்பி விடுவது வாடிக்கையாக நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவர்களுக்கு நல்ல பழக்கத்தை கற்றுத் தர வேணடிய ஆசிரியர்களே தாமதமாக செல்வதும், ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பு எடுப்பதும் மாணவர்களின் படிப்பை பாதிக்கிறது. பள்ளிக்கு மட்டம் போடும் மாணவர்களை திருத்த வேண்டிய ஆசிரியர்களே இப்படி பள்ளிக்கு மட்டம் போட்டால் என்னவாகும் நிலைமை. இது குறித்து கல்வித் துறை நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications