துபாய் தமிழர்களின் 5.5 டன் நிவாரணப் பொருள்.. ரூ.3.5 லட்சம் வரி கேட்டு அதிகாரிகள் அடம்
சென்னை: துபாய் வாழ் தமிழர்கள் அளித்துள்ள 5.5 டன் நிவாரணப் பொருட்களுக்கு துபாய் அரசு வரி விலக்கு அளித்துள்ள நிலையில் சென்னையில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ரூ.3.5 லட்சம் சேவை வரி கேட்பது அவர்களை வேதனை அடைய வைத்துள்ளது.
வரலாறு காணாத கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் துபாய் வாழ் தமிழர்கள் 5.5 டன் நிவாரணப் பொருட்கள் அளித்துள்ளனர். அதற்கு துபாய் அரசு வரி விதிக்காமல் தனது பெருந்தன்மையை காட்டியுள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனமோ நிவாரணப் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல முன்வந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளோ ரூ.3.5 லட்சம் சேவை வரி அளிக்க வேண்டும் என்கிறார்கள். நிவாரணப் பொருட்கள் தானே வரி விலக்கு அளியுங்கள் என்றால் அதற்கு தமிழக அரசின் அனுமதி தேவை என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அனுமதி பெற தமிழக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இப்பொருட்களை ட்யூட்டி ஃப்ரீயாக அனுமதிக்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும்.
இது பற்றி உதவ முன்வரும் நல்உள்ளங்கள் நந்தகுமார் என்பவரை 7708291643 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications