கை விட்ட காற்றாலை... தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தலை தூக்கும் அபாயம்!
நெல்லை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி திடீரென கை விட்டதால் மின் வாரிய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இதனால் மின் வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின் வெட்டு தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. குறிப்பாக கோடை காலங்களில் மின் வெட்டு கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி அளவை விட மின் தேவை அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசை இதை தவிர்க்க தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி வருகிறது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளது. பல முக்கிய நகரங்களில் வெயில் 100 டிகிரியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் பகலில் மட்டுமின்றி இரவிலும் புழுக்கம் அதிகரித்துள்ளதால் மின் விசிறி, ஏசி போனறவற்றின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதனால் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மின் பற்றாக்குறை காலங்களில் அபத்வனாக இருக்கும் காற்றாலையும் தற்போது கை விரித்து விட்டதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
நெல்லை மண்டலத்தில் உள்ள காற்றாலைகள் சுமார் 10 ஆயிரம் மெகா வாட் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. ஆனால் இரவு நேர கணக்குபடி மொத்தமே 22 மெகா வாட் மட்டுமே தற்போது காற்றாலை முலம் கிடைத்து வருகிறது. இதனால் 626 மெகா வாட் மின்சாரம் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு மேலும் மின் தேவை இருநதால் அதை சமாளிக்க அவ்வப்போது சில இடங்களில் சில மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டும் என்பதால் மினா் வாரியத்தினருக்கு மீண்டும் சோதனை தொடங்கியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications