ஏற்கனவே 2 .. இதுல நீ வேறயா.. கணவரின் காதலியை அடித்து துவைத்த மனைவிகள்!

Subscribe to Oneindia Tamil

பழனி: பழனியில் தங்கள் கணவருடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பழனி அருகில் உள்ள புது ஆயக்குடி 8 ஆவது வார்டை சேர்ந்த காளிமுத்து மனைவி துரையம்மாள். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் மடத்துகுளம் பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த பண்ணையில் டிரைவராக மாசாணதுரை என்பவர் வேலைபார்த்து வந்தார். இவருக்கு தேவி, ஆனந்தி என்ற 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் மாசாணதுரை, துரையம்மாளுடன் பழகி வந்தார். இவர்களது கள்ளத்தொடர்பு 2 மனைவிகளுக்கும் தெரியவந்தது.

சம்பவத்தன்று வேலைக்கு சென்று திரும்பிய துரையம்மாளை மாசாணதுரையின் மனைவிகள் தேவி, ஆனந்தி ஆகிய 2 பேரும் இனிமேல் தங்களது கணவருடன் பேசக்கூடாது என்று சத்தம் போட்டனர்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவியும், ஆனந்தியும் கல்லால் துரையம்மாளை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

படுகாயம் அடைந்த துரையம்மாள் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+