பாவம் பார்த்த திருநள்ளாறு அர்ச்சகருக்கு உணவில் மயக்க மருந்து.. 20 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு வலை
திருநள்ளார்: பக்தர்கள் போல் நடித்து அர்ச்சகர் வீட்டில் தங்கி இரவோடு இரவாக 20 சவரன் நகை மற்றும் ரூ 1.40 லட்சம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
காரைக்கால், திருநள்ளாறு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகிணி (ஆணின் பெயர்) (60).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

ரோகிணி திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 21 ஆம் தேதி மாலை பெண் ஒருவர் சந்தித்தார். அவர் அருகில் இருந்த இளைஞரை தனது மகன் வெங்கடேஷ் என்றும் அவருக்கு திருமணம் தடைபடுவதால் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய வந்துள்ளதாக அந்த பெண் கூறினார்.
கடந்த முறை எனது மகளை திருமணத் தடை விலக அழைத்து வந்தேன். அவளுக்கு நீங்கள்தான் பரிகார பூஜை செய்து சனீஸ்வரரை தரிசனம் செய்ய வைத்தீர்கள். இதனால் அவளுக்கு திருமணம் ஆனது. அது போல் என் மகனுக்கும் திருமணமாக வேண்டி, உங்களை பார்க்க வந்தோம் என்றார் அந்த பெண். ரோகிணியும் அதற்கென்ன சிறப்பாக செய்துவிடலாம் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர் அர்ச்சகர் ரோகிணி வீட்டிற்கு மகனுடன் சென்ற அந்த பெண் தங்குவதற்கு ரூம் கிடைக்காததால் உங்கள் வீட்டிலேயே தங்கி கொள்ளலாமா என கேட்டும் காலை சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருமாறும் ரோகிணியிடம் கேட்டுக் கொண்டார்.
இதை நம்பிய அர்ச்சகர் ரோகிணி இருவரையும் வீட்டில் தங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தார். பின்னர் அந்த பெண்ணும் இளைஞரும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு ரோகிணிக்கும் அவருடைய மனைவிக்கும் டிபன் பார்சல் வாங்கி வந்து கொடுத்தனர். அதை இருவரும் சாப்பிட்ட பின்னர் தூங்க சென்றனர்.
மறுநாள் காலை ரோகிணி எழுந்து பார்த்த போது அந்த பெண்ணையும், இளைஞரையும் காணவில்லை. இதன் அதிர்ச்சி அடைந்த ரோகிணி வீடு முழுவதும் அவர்களை தேடியுள்ளார். அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உடனே அங்கே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 20 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ 1.40 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகிணி திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் அறிவு செல்வம் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். பீரோவை அந்த பெண்ணும் இளைஞரும் உடைத்து திருடியுள்ளனர்.
இதனால் ரோகிணிக்கு உணவு வாங்கி வந்த பார்சலில் மயக்க மருந்து ஏதாவது கலந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பக்தர்கள் போல் நடித்து அர்ச்சகர் வீட்டில் பணம், நகைகளை திருடிச் சென்ற பெண்ணையும் இளைஞரையும் போலீஸார் தேடி வருகிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டில் தங்க வைப்பதும், அவர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்பதும் இது போன்ற சிக்கலில் முடியும் என போலீஸார் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறார்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications