உங்களால் என் குடும்பமே தெருவில் நிற்குது.. பதவி கேட்டு புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம் - பரபரப்பு
கும்பகோணம்: ‛‛உங்களால் என் குடும்பமே நடுத்தெருவில் நிற்கிறது'' எனக்கூறி பெண் ஒருவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்ததை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு என்பது அடுத்த மாதம் (அக்டோபர்) 27 ம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் விஜய் மாநாட்டையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகத்தினருடன் தீவிரமாக ஆலோசனை செய்தார்.
அதன்பிறகு நிர்வாகிகள் மத்தியில் மேடையில் புஸ்ஸி ஆனந்த் பேசி கொண்டிருந்தார். இந்த வேளையில் பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். பாலக்கரையை சேர்ந்த புஷ்பா என்பவர் . மேடையில் புஸ்ஸி ஆனந்த் பேசி கொண்டிருந்தபோது அங்கு சென்றார். அப்போது அவர் ‛‛என் தம்பி நீண்டகாலமாக ரசிகர் மன்றத்தி்ல நிர்வாகியாய் இருக்கிறார். அவருக்கு ஏன் பதவி கொடுக்கவில்லை'' என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் புஷ்பாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் புஷ்பா நகரவில்லை. மாறாக புஸ்ஸி ஆனந்திடம் ஆக்ரோஷமாக கேள்விகள் கேட்டார்.‛‛என் தம்பி பல ஆண்டுகளாக விஜயின் ரசிகர் மன்றனத்தில் நிர்வாகியாக இருந்தும், கட்சியில் பதவி வழங்கவில்லை. தலைவர் பதவியை ஏலம் போடுறாங்க.. அதுக்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியணும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் போர்டே எங்கள் நிலத்தின் தான் உள்ளது. ஆனால் என் தம்பிக்கு பதவி தரவில்லை. உங்களால் நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம்'' என ஆக்ரோஷமாக பேசினார். இதனால் புஸ்ஸி ஆனந்த் கடுப்பாகி போனார். இதையடுத்து புஷ்பாவை நிர்வாகிகள் சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்ற நிலையில் புஸ்ஸி ஆனந்த் கோபத்தில் வேகமாக புறப்பட்டு சென்றார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 27 ம் தேதி நடக்கும் நிலையில் பதவி கேட்டு பெண் ஒருவர் புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதம் செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications