கள்ளக்காதல் கொடூரம்... 3 வயது சிறுவனைக் கொன்று பீரோவில் ஒளித்து வைத்த பெண்!

தனது கள்ளக்காதலுக்கு, கள்ளக்காதலரின் மனைவி இடையூறாக இருந்ததாலும், தன்னை அம்பலப்படுத்தி விடுவதாக அவர் கூறியதாலும் ஆத்திரமடைந்த அந்த கள்ளக்காதலி, கள்ளக்காதலரின் 3 வயது சிறுவனை கொன்று தனது வீட்டு பீரோவில் அடைத்து வைத்த சம்பவம் வேலூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கள்ளக்காதலுக்காக நடைபெறும் கொலைகள் தினசரி நடந்தவண்ணம் உள்ளது. இதில் பெரும்பாலும் அப்பாவிகள்தான் பலியாகிறார்கள். இந்த நிலையில் வேலூரில் 3 வயது சிறுவனைக் கொடூரமாகக் கொன்று கைதாகியுள்ளார் சுமதி என்ற பெண்.
வேலூர், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபத்தைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி முரளி. இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இதில் 2வது மகன் பெயர் திணேஷ். 3 வயதான திணேஷ் நேற்று தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அதன் பின்னர் காணாமல் போய் விட்டான்.
பதறிப் போன முரளியும், சுமதியும் பிள்ளையைத் தேடி அலைந்தனர். ஆனால் மகன் கிடைக்கவில்லை. இதையடுத்து இருவரும் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில் குதித்தனர். தேடுதல் வேட்டை முடக்கி விடப்பட்டது. இந்த நிலையில் போலீஸாருக்கு ஒரு போன் வந்தது.
அதில் பேசிய நபர், முரளிக்கும், அவரது எதிர் வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி சுமதி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது. சுமதியைப் பிடித்து விசாரித்தால் உண்மை தெரியும் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து சுமதியை விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர். அவரது வீட்டுக்குச் சென்றனர்.
சுமதி வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகம் வலுத்ததைத் தொடர்ந்து போலீஸார் வீட்டைத் திறந்து உள்ளே சென்று சோதனையிட்டனர்.
வீட்டின் படுக்கை அறையியில் இருந்த பீரோவை திறந்து போலீஸார் உள்ளே பார்த்தபோது அங்கே திணேஷ் கை, வாய் கட்டப்பட்ட நிலையில் பிணமாக இருந்தான். உடலை மடக்கி உள்ளே வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுமதியிடம் போலீஸார் வழக்கமான முறையில் விசாரித்தபோது தான்தான் திணேஷைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் சுமதி.
போலீஸாரிடம் அவர் கூறுகையில், நானும், முரளியும் நீண்ட நாட்களாக பழகி வருகிறோம். அடிக்கடி உல்லாசமாக இருப்போம். இது முரளியின் மனைவிக்குத் தெரிந்து விட்டது. அவர் என்னிடம் சத்தம் போட்டார். உன்னை அம்பலப்படுத்துகிறேன் பார் என்றும் கோபத்துடன் கூறினார். இதனால் நான் ஆத்திரமடைந்தேன்.
என்னை அம்பலப்படுத்துவதற்கு முன்பு அவருக்கு சோகத்தைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதற்கு திணேஷைக் கொலை செய்ய முடிவெடுத்தேன்.
நேற்று வெளியில் விளையாடிக் கொண்டிருந்த திணேஷை எனது வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்தேன். பின்னர், அவனது கை மற்றும் வாயை கட்டிவிட்டு, அவனை அடித்து உதைத்தேன். இதனால், பலத்த காயம் அடைந்த அவன் வலிப்பு வந்ததைப் போல் துடித்தான். இதையடுத்து, தலையணையால் அவனது முகத்தில் அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்தேன். யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அவனை பீரோவில் வைத்து பூட்டினேன் என்று கூறினார் சுமதி.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் போலீஸார். சுமதியைக் கைது செய்து அவரை கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதல் சுகத்திற்காக தனது மகனை இப்போது இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார் முரளி. தனது கணவரின் செயலால் மகனைப் பறி கொடுத்து விட்டு துடித்துக் கொண்டிருக்கிறார் முரளியின் மனைவி சுமதி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications