பழிக்குப் பழி: கணவனை கொலை செய்தவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி
கோவை: மேட்டுப்பாளையம் அருகே, தனது கணவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த கொலையாளியை அதே பாணியில் கொன்று விட்டு ரத்தக்கறையுடன் சென்று போலீசில் சரணடைந்துள்ளார் ஒரு பெண்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய தம்பி. இவரை கடந்த ஆண்டு, அதேப் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ரவிக்குமார், கடந்த 14ம் தேதி ஜாமீனில் வெளி வந்தார்.

பின்னர் காளிபாளையத்துக்கு சென்ற ரவிக்குமார், தான் கொலை செய்த பெரிய தம்பியின் மனைவி சுகந்தாமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளார்.
இந்த சமயத்தில், அவரைப் பழி வாங்க நினைத்த சுகந்தாமணி, ரவிக்குமாரை கீழே தள்ளிவிட்டு அவரது தலையில் பெரிய கல்லை எடுத்துப் போட்டார். இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் அதே இடத்தில் இறந்து போனார்.
சுகந்தாமணியின் உடையில் ரத்தம் சிதறியது. அதே ரத்தக்கறையுடன், மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்று அவர் சரண் அடைந்தார். நடந்த சம்பவம் தொடர்பாக சுகந்தாமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications