சென்னை விமான நிலையத்தில்.. பொன்னியின் செல்வன் படம் பார்க்க 2 பிள்ளைகளுடன் சென்ற பெண் திடீர் தற்கொலை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கில் 2 பிள்ளைகளுடன் பொன்னியின் செல்வன் - 2 படம் பார்க்க சென்ற பெண் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் செயல்பட்டுக்கு வந்தது.
இந்த புதிய முனையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்றவைகளும் உள்ளன.

விமான நிலையத்தின் புதிய முனையத்தில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் - 2 படமும் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க தனது 2 பிள்ளைகளுடன் வந்த பெண் ஒருவர் , விமான நிலையத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. அமெரிக்காவில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 33). பாலாஜி - ஐஸ்வர்யா தம்பதிக்கு 9 ஆம் வகுப்பு படித்து வரும் மகனும் மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வரும் மகளும் உள்ளனர்.
பாலாஜி அமெரிக்காவில் வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனது பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன அழுத்தத்தால் ஐஸ்வர்யா பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் உள்ள தியேட்டருக்கு பொன்னியின் செல்வன் படம் பார்ப்பதற்காக நேற்று இரவு தனது இரண்டு பிள்ளைகளுடன் ஐஸ்வர்யா வந்துள்ளார்.

படம் பார்த்துக் கொண்டு இருந்த போது பாத்ரூம் சென்று விட்டு வருவதாக தனது இரண்டு பிள்ளைகளிடம் கூறி விட்டு தியேட்டரை விட்டு வெளியே சென்ற ஐஸ்வர்யா, உள்நாட்டு முனையம் வழியாக பன்னடுக்கு கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கார் பார்க்கிங்கின் 4-வது தளத்தில் இருந்து ஐஸ்வர்யா கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்தார். 4-வது மாடியில் இருந்து குதித்ததில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஐஸ்வர்யா உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த கார் ஓட்டுநர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்த சென்னை விமான நிலைய போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரது உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படம் பார்ப்பதாக தனது இரண்டு பிள்ளைகளுடன் விமான நிலைய தியேட்டருக்கு வந்த ஐஸ்வர்யா, தனது பிள்ளைகளை தியேட்டரிலேயே தவிக்க விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications