கணவரை கைது செய்ய வந்த போலீஸ் கண்முன்னே தீக்குளித்த மனைவி பலி.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை: குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை கைது செய்ய சென்ற போலீசார் கண்முன்னே, அவரது மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. சமீபத்தில் சிறைக்கு சென்று விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் மற்றொரு வழக்கில், மோகனை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் சிவமணி மற்றும் உதவி ஆய்வாளர் சேகர் உட்பட சில போலீசார் வந்தனர். அப்போது மோகனை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு மோகன் மனைவி பத்மாவதி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே திடீரென பத்மாவதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடல் கருகிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக இறந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பத்மாவதி உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பத்மாவதியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications