கள்ளக்காதல்.. திருட்டு.. கணவரி்ன் செயலால் அதிர்ச்சி.. 3 மகள்களுடன் தூக்கில் தொங்கிய மனைவி!
ஸ்ரீவைகுண்டம்: கள்ளக்காதல் போதாது என்று நகைத் திருட்டிலும் கணவர் இறங்கியதால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனது 3 மகள்களுடன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்தது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்வார்திருநகரி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (53). ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் மின் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயா (50). மகள்கள் சக்திமாலா தேவி (25). பி.இ., படித்துள்ளார். கலைவாணி (20). ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். காயத்ரி (17). ஆழ்வார்திருநகரியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தமிழ்ச்செல்வனுடன் தற்காலிக பணியாளராக ரேவதி (27) என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். ரேவதிக்கும், சுதீஷ்ராஜா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பின்னர் சுதீஷ்ராஜா மும்பைக்கு வேலைக்கு சென்று விட்டார். ரேவதியுடன் தமிழ்ச்செல்வனுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் ஒரு வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் சுதீஷ் ராஜாவின் நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சுதீஷ்ராஜாவுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பை போலீசார் சுதீஷ்ராஜாவை தேடி ஆழ்வார் திருநகரி வந்தனர். அங்கு அவர் இல்லை. இதனால் போலீசார் ஸ்ரீவைகுண்டம் வந்து சுதீஷ்ராஜாவின் மனைவி ரேவதியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் கூறவே தமிழ்செல்வனிடமும் விசாரித்தனர். அவர் இந்த நகைகளுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார்.

இதற்கிடையே இந்த நகைகளை ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு ஆசாரியிடம் விற்று பணமாக மாற்றிவிட்டதாக மும்பை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ஆசாரியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தமிழ்ச்செல்வனும், ரேவதியும் தன்னிடம் 80 பவுன் நகைகளை விற்று பணம் பெற்றதாக கூறினார்.
இதையடுத்து அவரை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்ச்செல்வன் மற்றும் ரேவதியிடம் நேற்று மாலை மும்பை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர்கள் போலீசுக்கே உரிய முறையில் விசாரணை நடத்தவே உண்மையை ஒப்புக் கொண்டனர். மேலும் ஆசாரியிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் கவுரவமாக வாழ்ந்த தமிழ்ச்செல்வன் திருட்டு நகையை விற்ற வழக்கில் சிக்கி விட்டாரே என மனைவி ஜெயா, மகள்கள் சக்திமாலாதேவி, கலைவாணி, காயத்ரி ஆகியோர் மனம் உடைந்து அழுதனர். இனி மானத்தோடு உயிர் வாழ முடியாது என நினைத்தனர். இதையடுத்து தாய் ஜெயா, மகள்கள் சக்திமாலாதேவி, கலைவாணி, காயத்ரி ஆகிய 4 பேரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
வீட்டின் மத்தியில் உள்ள அறையில் கலைவாணியும், காயத்ரியும் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர். தாய் ஜெயா, மூத்த மகள் சக்திமாலாதேவி படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை 6 மணி அளவில் பால்காரர் தமிழ்ச்செல்வன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. அதன்பின்னர் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் தமிழ்செல்வனின் தம்பி கணேசனை அழைத்து பால்காரர் தகவலைக் கூறினார்.
கணேசனும் நீண்ட நேரம் கதவைத் தட்டி பார்த்தும் யாரும் திறக்காததால் ஆழ்வார்திருநகரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாதவன், ஆழ்வார் திருநகரி இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும், 3 மகள்களும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆழ்வார் திருநகரியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் 4 பேரின் உடலைக் கைப்பற்றிய போது மகள்கள் தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், அப்பா, நாங்கள் பல முறை சொல்லியும் ஒரு தப்பை நீங்கள் தொடர்நது செய்தீர்கள். இனி உங்களை திருத்த முடியாது என்பதால் நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இரு தவறான செயல்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஒரே நாளில் காலி செய்து விட்டது ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications