For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி- பரிகார பூஜை

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விழுந்து பெண் பக்தர் பலியானதால் கோவில் நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின் நடை திறக்கப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி- வீடியோ

    தூத்துக்குடி: திருச்செந்தூரில் சுப்ரமணியசாமி கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஏராளமான பக்தர்கள் சிக்கினர். இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்னர் கோவில் திறக்கப்பட்டது.

    அறுபடை முருகன் கோவிலில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தினசரியும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து வந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இன்று பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் முருகன் கோவில் பிரகாரங்களில் தங்கி இளைப்பாறியிருந்தனர்.

    இடிந்து விழுந்த மண்டபம்

    இடிந்து விழுந்த மண்டபம்

    திருச்செந்தூர் முருகன் கோவில் நீண்ட பிரகாரங்களைக் கொண்டது. வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த மண்டபம் இன்று காலையில் திடீரென்று இடிந்து விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கிய பக்தர்கள்

    இடிபாடுகளில் சிக்கிய பக்தர்கள்

    பிரகாரத்தில் ஒய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்கள் உள்ளே சிக்கினர். இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை. பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

    பக்தர்கள் காயம்

    பக்தர்கள் காயம்

    கட்டிட இடிபாடுகளுக்குள் பக்தர்கள் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. அங்கு கோவில் நிர்வாகிகள் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் அச்சம்

    பக்தர்கள் அச்சம்


    பெண் பக்தர் கோவிலுக்குள் மரணமடைந்த காரணத்தால் கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது.
    கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பார்கள். பிரகார மண்டபத்தில் உருள்வலம் வருவது வாடிக்கை. இன்று மண்டபம் இடிந்து விழுந்துள்ளதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    பரிகார பூஜைக்குப் பின் நடை திறப்பு

    பரிகார பூஜைக்குப் பின் நடை திறப்பு

    பிரகாரம் இடிந்து பெண் பக்தர் உயிரிழந்த காரணத்தால் கோயிலில் நடைபெறவிருந்த அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜை நடந்த பின்னரே கோவில் நடை திறக்கப்படும். கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பரிகார பூஜைக்குப் பின் நடை திறப்பு

    பரிகார பூஜைக்குப் பின் நடை திறப்பு

    பிரகாரம் இடிந்து பெண் பக்தர் உயிரிழந்த காரணத்தால் கோயிலில் நடைபெறவிருந்த அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டது. பரிகார பூஜை நடந்த பின்னரே கோவில் நடை திறக்கப்படும் என கூறப்பட்டது. இரண்டு மணிநேரங்கள் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் என்பதால் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A temple wall collapsed in Murugan kovil in Thiruchendur and a woman devotee died on the spot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X