For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணப்பாறையில் டெங்குவிற்கு பலியான பெண்... ஸ்டெர்ச்சர் இன்றி மனைவி உடலை சுமந்த கணவர்

மணப்பாறை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் உயிாிழந்த பெண்ணின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால் 6 மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மணப்பாறை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலில் மரணமடைந்த பெண்ணின் உடலை அவரது கணவரும் மகனும் ஆம்புலன்ஸ் வரை கையில் சுமந்துசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அயன் புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னப் பொண்ணு. இவா் கடந்த திங்கள் கிழமை காய்ச்சல் காரணமாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு அவருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு வார காலத்திற்கு மேலாக சிகிச்சை பெற்றும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. தொடா்ந்து சிகிச்சை பெற்றுவந்த சின்னப் பொண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென உயிாிழந்தாா்.

Woman dies in dengue - Husband took body in his hand

உயிாிழந்ததைத் தொடா்ந்து உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல முற்பட்டபோது மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து பெண்ணின் உடல் 6 மணி நேரமாக வாா்டிலேயே வைக்கப்பட்டது.

தொடா்ந்து வலியுறுத்தப்பட்டதைத் தொடா்ந்து புதுக்கோட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அந்த வாகனத்தில் ஓட்டுநா் மட்டுமே இருந்த நிலையில், வாகனத்தில் உதவியாளரோ, ஸ்டெக்சா் வசதியோ இல்லை.

மருத்துவமனையிலும் ஸ்டெக்சா் வசதி இல்லாததால் பெண்ணின் உடலை அவரது கணவரும், மகனும் கைகளில் ஏந்தியபடி கொண்டுச் சென்றனா். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆத்திரமடைந்தனர்.

இறந்தவர்களின் உடலை சுமந்துசென்ற கொடூரம் இதுவரை வடமாநிலங்களில் மட்டும் நடந்துள்ளது. ஆனால், இப்போது தமிழகத்திலும் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

பெண்ணின் சடலம் கைகளில் சுமந்து செல்லப்பட்ட சம்பவம் அறிந்த செய்தியாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

மருத்துவமனையில் போதிய வசதி இல்லா நிலையில் அமைச்சா் விஜயபாஸ்கா் டெங்கு குறித்து தவறான தகவல்களை தொிவித்து வருவதாக குற்றம் சாட்டினா். இந்தச் சம்பவம்குறித்து உரிய விசாரணை மேற்கொள்வதுடன், இதற்குத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

English summary
A man took his wife body in hand no ambulance in Manaparai hospital,woman died in dengue feaver near Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X