Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவர், 2 குழந்தைகளை மறந்து... கள்ளக்காதலில் திளைத்த மனைவி.. ஒரு தற்கொலை.. ஒருவர் உயிர் ஊசல்!

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கணவர், 2 குழந்தைகளை கள்ளக்காதலில் திளைத்தார் மனைவி. தனது கள்ளக்காதலுக்கு கணவரால் இடையூறு இருப்பதாக கருதிய அவர் கள்ளக்காதலருடன் சேர்ந்து விஷம் குடித்தார். இதில் மனைவியின் உயிர் ஊசலாடுகிறது. கள்ளக்காதலர் இறந்து போனார்.

செங்கோட்டை அருகே பண்பொழி கிராமத்தில்தான் இந்த துயரச் சம்பவம். அக்கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் குருமூர்த்தி. 25 வயதான இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு கொத்தனார் மணிகண்டனும் நண்பர்கள்.

மணிகண்டனுக்கு 35 வயதாகிறது. அவரது மனைவி பெயர் கலா. இவருக்கு 29 வயதாகிறது. குருமூர்த்தி திருமணமாகாதவர்.

அடிக்கடி வீட்டுக்கு வந்ததால் வினை

அடிக்கடி வீட்டுக்கு வந்ததால் வினை

நண்பன் வீட்டுக்கு அடிக்கடி வருவார் குருமூர்த்தி. அப்போது தன்னை விட 4 வயது மூத்தவரான கலாவின் மீது குருமூர்த்தி கண் வைத்துள்ளார். அதை கவனித்த கலாவும், குருமூர்த்தியின் கள்ளக்காதலை ஏற்றுள்ளார்.

கணவர் பிள்ளைகளை மறந்து

கணவர் பிள்ளைகளை மறந்து

தனது கணவர், தன்னுடைய இரு குழந்தைகள் குறித்து அவர் கவலைப்படவில்லை. வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் கள்ள உறவில் இருவரும் மூழ்கித் திளைத்து வந்தனர்.

அடிக்கடி தனிமையில்

அடிக்கடி தனிமையில்

அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்த விவகாரம் மணிகண்டனுக்குத் தெரிய வந்தது. அவர் இருவரயைும் கண்டித்தார். குருமூர்த்தியை இனிமேல் வீட்டுப் பக்கமே வரக் கூடாது என்றும் கண்டித்தார். ஆனால் கலா அதை விரும்பவில்லை. கணவரின் தடையையும் அவர் பொருட்படுத்தவில்லை.

அறிவுரை கூறிய போலீஸ்

அறிவுரை கூறிய போலீஸ்

இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டனர். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் மணிகண்டன். போலீஸார் விசாரணை நடத்தி இருவரையும் கணடுபிடித்து கூட்டி வந்தனர். கலாவுக்கு அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.

ஓயாத சந்திப்பு

ஓயாத சந்திப்பு

ஆனாலும் இருவரும் ஓயவில்லை. ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அதுவும் சிரமமாக இருக்கவே தற்கொலை செய்ய முடிவெடுத்து வண்டாளம் பொட்டல் பகுதிகைக்குப் போய் விஷம் குடித்து விட்டனர்.

ஆண் மரணம்-- பெண் சீரியஸ்

ஆண் மரணம்-- பெண் சீரியஸ்

உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த இருவரையும் பார்த்து அப்பகுதி வழியாகப் போனவர்கள் ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸாரும் விரைந்து வந்தனர். இதில் வழியிலேயே குருமூர்த்தி இறந்து விட்டார். கலா உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+