TNPSC தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு.. கதறி அழுத தேர்வர்கள்!
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத வந்த பெண், 9 மணிக்கு மேல் வந்ததால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, உள்ளே அனுமதிக்குமாறு கூறி அப்பெண் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 4ல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு இன்று நடைபெறு வருகிறது. இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.
தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்
விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 9 மணிக்கு முன்னரே சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தாமதமாக வந்த தேர்வர்கள்
இந்நிலையில், நெல்லை பாளையங்கோட்டையில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 9 மணியளவில் வந்த தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை. 9 மணிக்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சரியாக கதவுகள் மூடப்பட்டன.
கதறி அழுத பெண்
அதன்பிறகு வந்த தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்கள், கேட்டுக்கே கீழே குனிந்து, உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சினர். தேர்வு எழுத வந்த பெண் ஒருவர், உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சிக் கதறினார். அப்போதும் அனுமதிக்காத நிலையில், அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பறக்கும் படை
குரூப் 4 தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு தொடர்பான பொருட்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசு கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 4,922 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ ஒளிப்பதிவு செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications