கணவர் மரணம்: 2 பச்சிளம் குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை சக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சங்கீத் குமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 24). இவர்களுக்கு கீர்த்தி மாலினி (4), மதுமிதா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். சங்கீத்குமார் கடந்த 2 மாதங் களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையொட்டி அவர் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் சில நாட்களும், பெற்றோர் வீட்டில் சில நாட்களுமாக இருந்து வந்துள்ளார். கணவர் இறந்த துக்கத்தால் காளீஸ்வரி யாருடனும் சரியாகப் பேசாமல் சோகத்துடன் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காளீஸ்வரி நேற்று மாலையில் 2 குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவரும் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரமாக வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வடமதுரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா சம்பவ இடத்துக்கு வந்து காளீஸ்வரி மற்றும் அவரது குழந்தைகள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் காளீஸ்வரி வீட்டில் இருந்த ஒரு கடிதத்தையும் கைப்பற்றினார்.
அந்த கடிதத்தில் என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடமதுரை சுற்றுவட்டாரா கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications