நெல்லையில் மனநலம் பாதித்த 2 வயது குழந்தையை முட்புதரில் வீசிய தாய்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் மனநலம் பாதித்த 2 வயது குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே இருக்கும் பட்டர்புரம் கிராமத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் இரண்டு வயது குழந்தை கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Woman leaves 2-year old mentally challenged kid in bush

இதற்கிடையே புதரில் கிடந்த குழந்தையை மக்கள் மீட்டனர். குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புதரில் கிடந்ததால் காயம் அடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை முட்புதரில் கிடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+