கணவரின் சடலத்துடன் 3 நாட்கள் வாழ்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி
மதுரை: கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருடைய சடலத்துடன் ஒரே வீட்டில், மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி மூன்று நாட்கள் வாழ்ந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (61). இவரது மனைவி நாகேஸ்வரி. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. பிளக்ஸ் போர்டு கட்டும் தொழில் செய்து வரும், இவர்களது மகன் மணிகண்டன் (35) தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார் மணிகண்டன். நேற்று மாலை ஊர் திரும்பிய மணிகண்டனுக்கு நடராஜனின் வீட்டிற்கு அருகே இருப்பவர்கள் போன் செய்தனர். அப்போது நடராஜனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பெற்றோரைப் பார்க்க விரைந்து வந்தார் மணிகண்டன். அங்கே கட்டிலில் நடராஜனின் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அருகிலேயே தாய் நாகேஸ்வரியும் இருந்துள்ளார்.
என்ன நடந்தது என்பது குறித்து நாகேஸ்வரியிடம் விசாரித்த போது, அவர் எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது.
உடனடியாக இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னரே நடராஜன் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மனநிலை பாதிக்கப்பட்ட நாகேஸ்வரி அதை யாருக்கும் தெரிவிக்காமல், சடலத்துடன் வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications