வயகரா போட்டு டெய்லி கட்டாய உறவு... காதலனுடன் சேர்ந்து கணவரைப் போட்டுத் தள்ளிய நிர்மலா!
வயகரா மாத்திரை போட்டுக்கொண்டு தினசரி உறவுத் தொல்லை கொடுத்த கணவரை, கூலிப்படை வைத்து கொன்று புதைத்துள்ளார் இளம்பெண்.
Recommended Video

தருமபுரி: வயாகரா மாத்திரையை சாப்பிட்டு விட்டு தினசரியும் தொல்லை கொடுத்ததால், விரக்தியடைந்த மனைவி, காதலனுக்கு பணம் கொடுத்து கூலிப்படை மூலம் கணவனை கொன்று புதைத்துள்ளார்.
சேலம் மாவட்டதை சேர்ந்தவர் கவியரசு,42. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்தார். அதன் பின் தர்மபுரியில் வசித்து வந்தார். அப்போது, நிர்மலா,23 என்ற இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவரை கவியரசு இரண்டாவதாக திருமணம் செய்டு கொண்டார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார் கவியரசு.
அதன் பின் வயாகரா மாத்திரைகளை சாப்பிட்டு, நிர்மலாவிற்கு தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பலமுறை நிர்மலா எடுத்துக்கூறியும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. எனவே, இதுபற்றி தனது முன்னாள் காதலன் அபினேஷ்,27 என்பவரிடம் நிர்மலா அழுது புலம்பியுள்ளார். மேலும், கவியரசுவை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுமாறு கூறிய அவர், அதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார்.

கூலிப்படை வைத்து கொலை
5 பேர் கொண்ட கூலிப்படை அமைத்த அபினேஷ் இரு வாரங்களுக்கு முன்பு கவியரசுவை கொலை செய்து தர்மபுரி அருகே குண்டலப்பட்டி-மல்லிக்குட்டை செல்லும் சாலையோரத்தில் குழி தோண்டி உடலை புதைத்து விட்டார். அத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்தனர் நிர்மலாவும் அபினேசும்.

நிர்மலாவின் செல்போன் பேச்சு
திடீர் திருப்பமாக தனது மகனை காணவில்லை என கவியரசுவின் தாய் போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் கவியரசுவின் செல்போன் நிர்மலாவிடம் இருப்பது தெரிந்தது. அதில் இருந்து அவர் அபினேஷூடன் தொடர்ந்து பேசி வருவதும் தெரியவந்தது.

உளறிக்கொட்டிய நிர்மலா
இதையடுத்து, நிர்மலா மற்றும் அபினேஷுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் முன்னுக்குப்பின் பதில் அளித்தனர். இதனையடுத்து அபினேஷை தனியாக விசாரணை செய்தனர்.

பணத்திற்கு கொலை
அப்போது நிர்மலாவுக்கு கவியரசு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்து, உடலை புதைத்ததாகவும், அதற்கு தேவையான பண உதவியை, நிர்மலா செய்ததாகவும் அபினேஷ் ஒப்புக்கொண்டார்.

கவியரசு உடல் சிக்கியது
அபினேஷ் கொடுத்த தகவலின் பேரில், அவரது கூட்டாளிகள் இருவரையும் பிடித்த போலீசார், நல்லாண்டி ஹள்ளியில் புதைக்கப்பட்ட கவியரசுவின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே அரசு மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் இதுதொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications