Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அருகே பலாத்கார முயற்சியில் இளம்பெண் அடித்து கொலை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குன்றத்தூர் அருகே இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலாத்கார முயற்சியில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சென்னை அடுத்த குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஆத்தனஞ்சேரி சக்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தனின் மனைவி திவ்யா (வயது 28). இவர்களுக்கு தர்ஷன் (வயது 4) என்ற மகனும், ரூபிகா (வயது3) என்ற மகளும் உள்ளனர்.

Woman murder near Chennai

இருவரும் படப்பை அடுத்த சாலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். இவர்களது வீட்டின் மாடியில் கோவிந்தனின் அக்கா மகள் அமுதா குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது கணவர் டெய்லர்.

கோவிந்தனின் பிள்ளைகள் வேன் மூலம் வீடு திரும்பும்போது அவர்களை அமுதாதான் அழைத்து கொண்டு வீட்டில் வந்துவிடுவாராம். வழக்கம்போல நேற்றும் திவ்யாவின் குழந்தைகள் 2 பேரையும் அமுதா வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார்.

அப்போது திவ்யாவின் வீடு திறந்திருந்தது... ஆனால் திவ்யாவை காணவில்லை. இதனல் திவ்யாவை அவர் தேடியபோது, குளியலறையில் பலத்த காயங்களுடன் மூச்சு பேச்சில்லாமல் திவ்யா இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் அலறியபடி பக்கத்து வீட்டுக்காரர்களை அமுதா வரவழைத்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

திவ்யாவின் முகம், கழுத்தில் கடுமையான காயங்கள் இருந்தன. தாலி சரடு, கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகள் சிதறி கிடந்தன. நகை கொள்ளை மற்றும் பலாத்கார முயற்சியில் இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+