கள்ளக் காதலனை உதறிவிட்டு வர மறுப்பு- நடுரோட்டில் மனைவிக்கு சரமாரி சதக் சதக் குத்து- கணவர் கைது
கள்ளக் காதலனை உதற மறுத்த மனைவியை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு: கள்ளக் காதலனை கைவிட்டு வர மறுத்த மனைவியை ஈரோடு அருகே நடுரோட்டில் மாமியார் முன்னிலையிலேயே சராமரியாக கத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் சுப்பிரமணியவலசுவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சீதா. தறிப்பட்டையில் தொழிலாளர்களாக பணிபுரியும் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கள்ளக் காதல்
இவர்களது குடியிருப்பு பகுதியில் சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பிரபு என்பவர் தங்கியிருந்து சலூனில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பிரபுவுக்கும் நாகராஜ் மனைவி சீதாவுக்கும் 'லிங்க்' ஏற்பட்டு கள்ளக் காதலானது.

சங்ககிரிக்கு எஸ்கேப்
ஒருகட்டத்தில் கள்ளக் காதல் ஜோடி சங்ககிரிக்கு எஸ்கேப்பானது. இதற்கு சீதாவின் தாய் ரேணுகாவும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் சுப்பிரமணியன்வலசில் உள்ள தாய் ரேணுகா வீட்டுக்கு ஹாயாக திரும்பி வந்துள்ளார் சீதா.

சரமாரி கத்தி குத்து
இதைக் கேள்விபட்டு ஆத்திரத்துடன் ரேணுகா வீட்டுக்குப் போய் ஓடிப்போன மனைவி சீதாவை அடித்து துவைத்திருக்கிறார் நாகராஜன். இதிலும் ஆத்திரம் குறையாததால் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதக் சதக் என கை ஓயும் வரை சீதாவை குத்தி குதறியிருக்கிறார் நாகராஜன்.

கைது
இதனால் சீதா அப்படியே ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து இறந்து போனார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார் நாகராஜ். பின்னர் தலைமறைவாக இருந்த நாகராஜை போலீஸ் கைது செய்தது. போலீசாரிடம் மனைவியின் கள்ளக் காதலை தாங்க முடியாமல் குத்தி கொலை செய்தேன் என ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார் நாகராஜன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications