வாகாக வாங்கி பேன்ட் பாக்கெட்டுக்குள் கரன்சியை சொருகிய பெண் போலீஸ்... வாட்ஸ் ஆப்பில் பரபரப்பு!
சென்னை: வாட்ஸ் ஆப்பில் ஒரு வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்ற பதத்திற்கு ஏற்பட ஒரு பெண் போலீஸ் அதிகாரி, சாலையில் வைத்து லஞ்சம் வாங்கி அதை தனது பேன்ட் பாக்கெட்டில் வைக்கும் காட்சிதான் அது.
இந்தக் காட்சி சென்னை அருகே கும்மிடிப்பூண்டி பகுதியில் வைத்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பைக்கில் வந்த இருவரை மடக்க நிறுத்தும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி அவர்களிடம் ஏதோ பேசுகிறார் போலும். அந்தக் காட்சியைக் காணவில்லை.

அதற்கு அடுத்து ஒரு இளைஞர் அந்த பெண் போலீஸிடம் கையில் பணத்தைத் திணிக்கிறார். அதை அந்த பெண் போலீஸ் அதிகாரி வாங்கி தனது பேன்ட் பாக்கெட்டில் திணிக்கிறார்.
கையில் வாக்கி டாக்கியில் பேசுவது போலவும் அவர் பாவனை காட்டிக் கொள்கிறார். அவரது முகம் தெளிவாகத் தெரிகிறது. அவர் முன்பு சென்னையில் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது.
இந்த பெண் போலீஸ் அதிகாரி நிற்கும் இடத்தில் ஒரு பைக் இருக்கிறது. அதில் பின்னால் போலீஸ் என்று எழுதப்பட்டுள்ளது. வாகன எண் டிஎன் 20 ஜி 1131 என்று குறிப்பிட்ப்பட்டுள்ளது. அவருடன் கூடவே 2 ஆண் போலீஸாரும் நிற்கிறார்கள். வாகன சோதநை போலத் தெரிகிறது. ஆனால் இவர்கள் அனைவருமே காக்கி யூனிபார்மில் உள்ளனர். டிராபிக் போலீஸ் சீருடையில் இல்லை.
தற்போது இவரை ஆயுதப் படைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications