மானாமதுரை: குடும்பத்தகராறில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப் போட்டுத் தற்கொலை

மானாமதுரையில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெண் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மானாமதுரையில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுத ஜோதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தற்கொலைக்கு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மானாமதுரை கன்னார் தெருவில் வசிப்பவர் அமுதஜோதி(38). திருச்சி ரயில்வே போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவரது கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திருச்செந்தூர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிகிறார். ஏழு வயதில் பெண்குழந்தை உள்ளது.

Woman Police inspector commits suicide

1999ம் ஆண்டு நேரடி எஸ்ஐ பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று திருச்சியில் பணிபுரிகிறார். நான்கு மாத மருத்துவ விடுப்பில் வீட்டில் உள்ளார். அடிக்கடி கணவருக்கும் அமுதசெல்விக்கும் தகராறு ஏற்படுவது உண்டு எனகூறப்படுகிறது. நேற்று காலை 8 மணி வரை அனைவரிடமும் நன்றாக பேசியுள்ளார். காலை 9 மணிக்கு படுக்கையறையினுள் சென்றவர் அங்கிருந்த சால்வையினால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மரணத்திற்கு முன்னர் சிவகங்கை எஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பி சங்கர் உள்ளிட்டோருக்கு தற்கொலைக்கான காரணங்களை விளக்கி கடிதம் எழுதி வைத்துள்ளார். அமுதசெல்வியின் உறவினர்கள் கூறுகையில் அமுதஜோதி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு பிரச்சனை ஏதும் இல்லை. கணவருடன் சிறு சிறு பிரச்சனைகள்தான் உண்டு, அமுதஜோதி சகோதார சகோதரிகள் காவல் துறையில் பணியாற்றுகின்றனர். மிகவும் தைரியமானவர் என சக போலீசாரால் பாராட்டப்பட்டவர் என்றனர்.

மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண் காவலர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ராமு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காதல் பிரச்சினை என்பது தெரியவந்தது.
திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்மமான முறையில் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் பற்றிய விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது.

மானாமதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை ஆயுதப்படையில் பணிபுரியும் சர்மிளாதேவி என்ற பெண்காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து பெண் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களால் சிவகங்கை மாவட்ட பெண் போலீசார் பீதியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+