'நங்'கென்று பெண் ஊழியரின் தலையில் 3 முறை குட்டி, திட்டிய மேனேஜர் கைது
சென்னை: பெண் ஊழியர் விடுமுறை எடுத்ததற்காக கோபப்பட்டு அவரை தரக்குறைவாக திட்டியதோடு நில்லாமல் தலையிலும் 3 முறை பலமாக குட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி ரோட்டில் கார்கோ இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு மேலாளராக இருப்பவர் ரவி சைதன்யா. இவருக்கு வயது 24தான் ஆகிறது. இதே நிறுவனத்தில் ரதி தேவி என்ற 23 வயது பெண் ஊழியர் பணியாற்றுகிறார்.
திருமணமாகாதவர், சைதாப்பேட்டையில் வீடு உள்ளது. நேற்று கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழுதபடி வந்தார் ரதிதேவி. அங்கு ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் மேற்கண்ட நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக வேலை பார்த்தேன். தற்போது ஒரு வாரம் விடுமுறை எடுத்தேன்.
விடுமுறை முடிந்து வேலைக்கு வந்தேன். அப்போது மேலாளர் ரவிசைதன்யா, நான் விடுமுறை எடுத்ததை கண்டித்து தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் திடீரென்று எனது தலையில் 3 முறை குட்டினார். பலமாக குட்டியதால் தலையில் வலி ஏற்பட்டது. நான் கதறி அழுதும் கூட இரக்கமே இல்லாமல் திட்டியபடி இருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅறு கூறியிருந்தார் ரதிதேவி.
புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சைதன்யாவை இரவோடு இரவாக கைது செய்தனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications